Don't Miss!
- Lifestyle
சப்பாத்தி, பூரிக்கு சூப்பராக இருக்கும்... ஆலு பட்டர் மசாலா
- News
"காவி".. நள்ளிரவு 2 மணிக்கு "அவருக்கு" போனை போட்ட ஷாருக்கான்.. மேட்டரை உடைத்த சி.எம்.. ஒரேநாளில் பரபர
- Sports
ஒரே போட்டியில் பல மாற்றங்கள்.. நியூசி, உடனான 3வது ODI போட்டி..ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா பலே திட்டம்
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
முக்கியமான சர்வதேச விருதை தவறவிட்ட RRR... அதிர்ச்சியில் படக்குழு... ஆஸ்கர் ரேஸில் பின்னடைவா?
லண்டன்: தெலுங்கில் ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி வெளியானது.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில், Critics Choice Awards விழாவில் மேலும் இரு விருதுகளை வென்று அசத்தியது.
அதனைத் தொடர்ந்து பாஃப்டா விழாவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் விருது வெல்லும் என ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
கோல்டன் குளோப் விருது...நாமினேஷனில் இடம் பிடித்த ஆர்.ஆர்.ஆர்... குவியும் வாழ்த்து !

சர்வதேச விருது மேடைகளில் ஆர்.ஆர்.ஆர்
தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஜமெளலி, தற்போது சர்வதேச அளவில் அதிக கவனம் ஈர்த்து வருகிறார். அவரது இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் ரிலீஸான ஆர்ஆர்ஆர் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய்தேவ் கன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்த ஆர்.ஆர்.ஆர் தற்போது சர்வதேச விருது போட்டிகளில் பங்கேற்று வருகிறது.

பாஃப்டா 2023 விருதுகள்
பிரிட்டிஷ் அகடாமி ஃபிலிம்ஸ் அவார்ட்ஸ் எனப்படும் பாஃப்டா விருதுகள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. பாஃப்டா 2023ம் ஆண்டுக்கான விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் ஆர்.ஆர்.ஆர் போட்டியிட்டது. ஜேம்ஸ் கேமரூன் உட்பட பல ஹாலிவுட் கலைஞர்களால் பாராட்டப்பட்ட ஆர்.ஆர்.ஆர் கண்டிப்பாக விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இறுதிக்கட்ட நாமினேஷனில் இருந்து வெளியேறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில், ஆல் சைட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட், அர்ஜென்டினா, 1985, கோர்சேஜ், டிசிஷன் டு லீவ், தி க்வைட் கேர்ள் ஆகிய படங்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளன.

அதிர்ச்சியில் படக்குழு
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கண்டிப்பாக பாஃப்டா விருது வெல்லும் என படக்குழுவினரும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் உள்ள படக்குழு, அடுத்த வாரம் நடைபெறும் ஆஸ்கர் விழாவில் விருது கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர். ஆஸ்கர் விருது விழாவில் 15 பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் போட்டியிடுகிற்து. இதனால் ஏதேனும் ஒருசில பிரிவுகளில் ஆஸ்கர் விருது கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
ஏற்கனவே அடுத்தடுத்து இரண்டு சர்வதேச விருதுகளை வென்று ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற Critics Choice Awards விழாவில், இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றது ஆர்.ஆர்.ஆர். சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம், சிறந்த பாடல் என இரண்டு விருதுகளை வென்றது. முன்னதாக நாட்டு கூத்து பாடலுக்காக கோல்டன் குளோப் விருது வென்றிருந்தார் கீரவாணி. இதன் அடிப்படையில் நாட்டு கூத்து பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.