Don't Miss!
- News
நேதாஜி பயங்கரவாதியாம்.. சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக எம்எல்ஏ.. அதுக்கு சொன்ன காரணம் இருக்கே.. ஷாக்!
- Finance
24 வருடங்களில் இல்லாதளவுக்கு 17% ஆக வட்டி அதிகரிப்பு.. மீள்வதற்கு வழியே இல்லையா?
- Automobiles
இந்த காருக்கான புக்கிங்கை கேன்சல் செய்தால் ரூ2லட்சம் பணம்! ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ள செம ஆஃபர்!
- Technology
45 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல.. NASA செய்யும் விபரீதமான காரியம்!
- Sports
டாஸில் தோற்றாலும் நல்ல விஷயம்.. 3வது ODIல் 2 ஸ்டார் வீரர்களை நீக்கிய ரோகித்..வித்தியாசமான ப்ளேயிங்11
- Lifestyle
சனி-சந்திர சேர்க்கையால் உருவான விஷ யோகம்: இந்த 3 ராசிக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு... உஷார்..
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
RRR படத்துக்கு மேலும் இரண்டு சர்வதேச விருதுகள்... ஆஸ்கர் ரேஸில் எகிறும் எதிர்பார்ப்பு
ஏஞ்சல்ஸ்: ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி வெளியானது.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில், மேலும் இரு சர்வதேச விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம், சிறந்த பாடல் என இரு பிரிவுகளில் Critics Choice Awards வென்று சாதனை படைத்துள்ளது.
அப்படி சொல்லாதீங்க.. RRR பாலிவுட் படமே இல்லை.. ஹாலிவுட்டில் டென்ஷனான ராஜமெளலி.. என்ன ஆச்சு?

ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு Critics Choice Awards
தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குநர் என கொண்டாடப்படும் ராஜமெளலி, தற்போது சர்வதேச அளவில் அதிக கவனம் ஈர்த்து வருகிறார். அவரது இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் ரிலீஸான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய்தேவ் கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையை தொடர்ந்து தற்போது சர்வதேச விருதுகளை வென்று அசத்தி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற Critics Choice Awards விழாவில், இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

இரண்டு விருதுகளுடன் ராஜமெளலி உற்சாகம்
ஆர்.ஆர்.ஆர் வெளியானதில் இருந்தே இந்தப் படத்திற்கு சர்வதேச விருதுகள் கிடைக்கும் என ஹாலிவுட் பிரபலங்கள் கூறி வந்தனர். இந்நிலையில், Critics Choice Awards விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான விருது 'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்கு கிடைத்துள்ளது. அதேபோல் சிறந்த பாடலுக்கான விருதும் இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. Critics Choice Awards விழாவில் பங்கேற்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் இந்த விருதுகளை வென்றதை உற்சாகமாக கொண்டாடினர். ராஜமெளலியும் அவரது மகன் கார்த்திகேயாவும் இரண்டு விருதுகளுடன் சியர்ஸ் அடித்து உற்சாகமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்தடுத்து சர்வதேச விருதுகள்
இந்திய சுதந்திரத்துக்காக போராடிய அல்லுரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம் இருவரும் நண்பர்களாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவானது தான் இந்த ஆர்.ஆர்.ஆர். ராஜமெளலியின் உறவினரும் முன்னணி மியூசிக் கம்போஸருமான கீரவாணி இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். தற்போது Critics Choice Awards வென்ற நாட்டு கூத்து பாடல், கடந்த வாரம் கோல்டன் குளோப் விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக Critics Choice Awards விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு இரு பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.

ஆஸ்கர் ரேஸில் எகிறும் எதிர்பார்ப்பு
ஹாலிவுட் திரைப்படங்களின் மேக்கிங் எப்படி இருக்குமோ, அதற்கு இணையாக உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர், ஆஸ்கர் விருதை வெல்லுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 15 பிரிவுகளில் இந்த படம் ஆஸ்கர் போட்டியில் நாமினேட் ஆகியுள்ளது. அதேபோல் பாஃப்தா விருதுக்கும் ஆர்.ஆர்.ஆர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி பாஃப்தா விருது விழாவும், 24ம் தேதி ஆஸ்கர் விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இதனால் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.