twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சைப்ரஸ் பட விழாவில் ராம்!

    By Staff
    |

    அமீர் இயக்கத்தில், ஜீவா, கஜாலா நடித்த படமான ராம், சைப்ரஸ் நாட்டில்நடைபெறும் உலகப் பட விழாவில் போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது.

    ஜீவா மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த படம் ராம். கடந்த ஆண்டுவெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. கோவாவில் நடந்த இந்தியத் திரைப்படவிழாவில் ராம் திரையிடப்பட்டது.

    இந் நிலையில் சைப்ரஸ் நாட்டில் இன்று தொடங்கி வரும் 27ம் தேதி வரைநடைபெறும் உலகத் திரைப்பட விழாவில் ராம் படம் திரையிடப்படவுள்ளது.

    இதில் கலந்து கொள்ள ராம் உள்பட உலகம் முழுவதும் இருந்து 130 படங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

    இந்தியாவிலிருந்து ராம் தவிர ஷாருக்கான் நடித்த பெஹேலி இந்திப் படம் மட்டுமேஇந்த விழாவுக்குத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


    ராம் படம் சைப்ரஸ் பட விழா விருதுக்குப் போட்டியிடும் படங்களில் ஒன்றாகவும்தேர்வாகியுள்ளது. ஆனால் ஷாருக்கானின் படம் திரையிடுவதற்கு மட்டுமேதேர்வாகியுள்ளது.

    கடந்த 1960ம் ஆண்டு கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில்சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு சிறந்த படத்திற்கானவிருது கிடைத்தது.

    அதன் பிறகு எந்தத் தமிழ்ப் படமும் (கமர்சியல் படங்கள்) உலக அளவில் விருதுஎதையும் பெறவில்லை.


    இப்போது ராம் படத்திற்கு விருது கிடைத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குப்பிறகு சர்வதேச விருது பெற்ற முதல் படம் என்ற பெருமை கிடைக்கும்.

    சைப்ரஸ் பட விழாவில் கலந்து கொள்வதற்காக ராம் பட இயக்குனர் அமீர் சைப்ரஸ்சென்றுள்ளார்.

    இப்போது அவர் சூர்யாவின் தம்பி கார்திக்கும்-ப்ரியா மணியும் நடிக்கும் பருத்தி வீரன்படத்தை இயக்கி வருகிறார்.


    ராம் படம் மூலம் தான் சூப்பர் குட் பிலிம்ஸ் அதிபர் ஆர்.பி.செளத்ரியின் மகன்ஜீவாவுக்கு பெரிய பிரேக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

      Read more about: ram in cyprus film festival
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X