Don't Miss!
- News
"கொடூரத்தின் உச்சம்.." அரசு வேலைக்காக 5 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர்! பயங்கரம்
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Lifestyle
Today Rasi Palan 25 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முதலீடும் செய்வதைத் தவிர்க்கவும்...
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
வரலாற்று சாதனை.. முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆன இந்திய பாடல்.. நாட்டுக் கூத்து!
லாஸ் ஏஞ்சல்ஸ் : இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் 2023 பரிந்துரை பட்டியலில் தேர்வாகி உள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர்.
இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். உலக அளவில் இத்திரைப்படம் ரூ 1000கோடியை வசூலித்து சாதனைப்படைத்தது.
முக்கியமான சர்வதேச விருதை தவறவிட்ட RRR... அதிர்ச்சியில் படக்குழு... ஆஸ்கர் ரேஸில் பின்னடைவா?

ஆஸ்கர் விருது
2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதில் ஆர்ஆர்ஆர் திரைப்படம், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல்,சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொப்பாளர், சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகை , சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை அமைப்பாளர், சிறந்த சிகை அலங்காரம் , சிறந்த ஒப்பனையாளர், சிறந்த காட்சி அமைப்பு ஆகிய பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டது.

இறுதிப்பட்டியலில் தேர்வான நாட்டு நாட்டு
பல்வேறு பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்களின் இறுதியான லீஸ்ட் இன்று வெளியாகி உள்ளது. இதில் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவில் பரிந்துரை பட்டியலில் தேர்வாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் தேர்வான முதல் இந்திய பாடல் என்ற பெருமையை நாட்டு நாட்டு பாடல் பெற்றுள்ளது.

ஆஸ்காரை வெல்லுமா?
ஆஸ்கர் விருதுகளின் இறுதிப்பட்டியல் இன்று வெளியானதைத் தொடர்ந்து மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் விழாவில் இறுதிப்பட்டியலில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடல் வெல்லுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

கோல்டன் குளோப் விருது
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. அடுத்ததாக கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.