twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்னேகாவும் செளந்தர்யாவும்

    By Staff
    |

    மறைந்த நடிகை செளந்தர்யாவின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள முதல் விருதுநடிகை ஸ்னேகாவுக்கு வழங்கப்படுகிறது.


    கர்நாடகத்தைச் சேர்ந்த செளந்தர்யா, கடந்த மக்களவைத் தேர்தலின்போதுபாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய பெங்களூரில் இருந்து ஆந்திராவுக்குச் சென்றபோதுவிமான விபத்தில் பலியானார்.

    விபத்துக்கு சில காலத்துக்கு முன்பு தான் அவருக்குத் திருமணமாகியிருந்தது.பலியானபோது அவர் கர்ப்பமாக இருந்தார்.

    ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடனும்,தெலுங்கு, கன்னட, மலையாளப் படங்கள் பலவற்றில் நடித்துள்ள செளந்தர்யாவின்மரணம் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு சம்பவம்.

    தற்போது செளந்தர்யாவின் நினைவாக கன்னட்-ஆந்திர லலித கலா அகாடமி என்றஅமைப்பு செளந்தர்யா விருது என்ற நினைவு விருதினை ஏற்படுத்தியுள்ளது.


    இதன் முதல் விருது ஸ்னேகாவுக்கு வழங்கப்படுவதாக அகாடமியின் நிறுவனரும்,நடிகருமான சாய்குமார் அறிவித்துள்ளார்.

    சாய்குமார் கூறுகையில், செளந்தர்யாவின் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டும்பாதிக்கவில்லை. திரையுலகில் பலரை அதிர்ச்சியிலிருந்து இன்னும் ஆழ்த்திவைத்துள்ளது. செளந்தர்யா இல்லை என்பதையே நம்ப முடியவில்லை.

    அவர் மிகச் சிறந்த நடிகை, உயிரோடு இருந்திருந்தால் எத்தனையோ விருதுகளைப்பெற்றிருப்பார். அவர் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள செளந்தர்யா விருதுதலைசிறந்த நடிகைகளுக்கு வழங்கப்படும்.

    முதல் விருது ஸ்னேகாவுக்கு வழங்கப்படுகிறது. கன்னட, தெலுங்குப் படவுலகில்செளந்தர்யாவின் இடத்தை நிரப்பியிருப்பவர் ஸ்னேகாதான்.


    எனவே அவருக்கு இந்த முதல் விருது வழங்கப்படவுள்ளது.

    பெல்லாரியில் ஏப்ரல் 2ம் தேதி நடைபெறும் விழாவில் ஸ்னேகாவுக்கு விருதுவழங்கப்படும் என்றார் சாய்குமார்.

    ஏகப்பட்ட குழப்பத்தில் சிக்கி மீண்டுள்ள ஸ்னேகாவுக்கு இந்த விருது பெரும்ஆறுதலாக அமையும் என நம்பலாம். இன்னொரு சந்தோஷமான செய்தியும் உண்டு.

    மலையாளம், தெலுங்கில் திருப்திகரமான அளவுக்கு படங்கள் உள்ளதாம்ஸ்னேகாவிடம்.

    மலையாளத்தில் அவர் மம்மூட்டியுடன் நடித்து வரும் துருப்புகுளன் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாம். இப்படத்தின் மூலம் மலையாளத்தில்காலுன்றிவிடலாம் என நம்புகிறார் ஸ்னேகா.


    ஏப்ரலில் மலையாளப் புத்தாண்டு அன்று இந்தப் படம் வெளியாகிறது.

    அதேபோல, தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடித்துள்ள ஸ்ரீராமதாஸு என்ற பக்திப்படத்தையும் ஸ்னேகா ரொம்பவே எதிர்பார்க்கிறார். இப்படத்தின் பாடல் கேசட்டுகள்விற்பனையில் பெரும் சாதனை படைத்துள்ளது.

    முதலில் இப்படத்தில் ஜோதிகா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தில் தனக்குதரப்பட்ட காஸ்ட்யூம்கள் திருப்தி அளிக்காததால், பாதியிலேயே விலகிக்கொண்டதால், ஸ்னேகா புக் ஆகி நடித்தார்.

    இந்தப் படமும் தெலுங்கில் தனது மார்க்கெட்டை மீண்டும் உறுதியாக்கும் எனநம்புகிறார் ஸ்னேகா.

    தமிழில் அவர் நடித்து வரும் புதுப்பேட்டை படமும் தமிழ்ப் புத்தாண்டுக்குவெளியாகிறது. இப்படத்தில் விபச்சாரி வேடத்தில் கலக்கலாக நடித்துள்ளார் ஸ்னேகா.

    இப்படி ஒரே மாதத்தில், அடுத்தடுத்து 3 மொழிகளில் தான் நடித்துள்ள படங்கள்வெளியாவதால் ஸ்னேகா மிக மகிழ்ச்சியாக உள்ளார்.

      Read more about: sneha to get soundarya award
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X