50 ஆண்டு நிறைவு...ஆஸ்கர் விருது விழாவில் பெருமைப்படுத்தப்பட்ட காட்பாதர் படம்
லாஸ் ஏஞ்சல்ஸ் : 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்கர் 2022 விருதுகள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கில் நடைபெற்ற இந்த விருதுகள் வழங்கும் விழாவில் ஏராளமான ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

94வது ஆஸ்கர் விருதுகள்
94வது ஆஸ்கர் விருதுகள் இந்த விழாவில் நடைபெற்றன. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி உள்ளிட்ட 24 பிரிவுகளுக்கான விருதுகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. கடந்த மாதத்திலேயே திட்டமிடப்பட்டிருந்த இந்த விழா கொரோனா காரணமாக தற்போது நடைபெற்றது.

சிவப்பு கம்பள வரவேற்பு
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. காமெடி நடிகர்கள் எமி ஸ்கூமர், வாண்டா ஸ்கைஸ் இந்த நிகழ்ச்சியை நடிகை ரெஜினா ஹாலுடன் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி ஸ்டார் மூவிஸ், ஸ்டார் மூவிஸ் எச்டி மற்றும் ஸ்டார் வேர்ல்ட் ஆகியவற்றில் ஒளிபரப்பாகின. சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது அப்டேட்கள் வழங்கப்பட்டன.

காட்பாதர் 50 ஆண்டு கொண்டாட்டம்
மேலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் நிகழ்ச்சியை காண முடிந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பிரபல காட்பாதர் படத்தின் 50வது ஆண்டு நிறைவை கொண்டாடும்வகையில் சிறப்பு வீடியோ ஒளிப்பரப்பப்பட்டது. பிரான்சிஸ் ப்ராட் கோப்பாலா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கடந்த 1972ல் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது.

திரையரங்குகளில் ரிலீஸ்
முன்னதாக காட்பாதர் படத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆஸ்கரில் சிறப்பான விஷயங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் வில் பாக்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 50வது ஆண்டு கொண்டாட்டத்தையடுத்து இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











