சூர்யா, ஜோதிகா, உதயநிதிக்கு விருது கிடைக்குமா...காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை : ஆண்டுதோறும் சினிமா துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருது வழங்கப்படுவது அனைவரும் அறிந்தது தான். சினிமா துறையை போன்றே, உலக அளவில் மனித சமூகத்தின் வளர்ச்சிக்காக பங்களிப்பை அளிப்பவர்களுக்கு Global Community Oscars Awards வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2021 ல் உலக அளவில் சமூக வளர்ச்சிக்காக தங்களின் பங்களிப்பை அளித்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு Global Community Oscars Awards வழங்கப்பட உள்ளது. இந்த விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட பிரபலங்கள்

பரிந்துரைக்கப்பட்ட பிரபலங்கள்

இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த சூர்யா, ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் சமூகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக இவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.

எதற்காக சூர்யா -ஜோதிகா

எதற்காக சூர்யா -ஜோதிகா

சமூக பொறுப்பு வாய்ந்த, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை தேர்வு செய்து நடிப்பதற்காக சூர்யாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். இதே போல் சூர்யாவுடன் இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சமூக அக்கறை கொண்ட படங்களை தயாரித்து வருவதற்காக ஜோதிகாவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.

இதுதான் காரணமா

இதுதான் காரணமா

நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினின் பெயரும் Global Community Oscars Awards க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபடுவதுடன், இளைஞர்கள் பலர் அரசியலுக்கு வர ஊக்கப்படுத்தி வருவதால் அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம்.

எப்போ நடக்குது விழா

எப்போ நடக்குது விழா

International Emerging star award விழாவுடன் சேர்ந்து Global Community Oscars Awards யும் வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் விழா பிப்ரவரி 19 ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதனால் Global Community Oscars Awards பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று கோலிவுட் பிரபலங்களுக்கு விருது கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Recommended Video

JaiBhim கதையின் உண்மையான Hero Govindhan Speech in Jaibhim Success Meet
வாழ்த்தும் ரசிகர்கள்

வாழ்த்தும் ரசிகர்கள்

இருந்தாலும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள சூர்யா, ஜோதிகா, உதயநிதிக்கு விருது கிடைக்க ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுவரை பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்த Global Community Oscars Awards விழா, இந்த மூன்று பிரபலங்களால் அதிகம் கவனிக்கப்படுவதாகி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X