டிவி சாய்ஸ் விருதுகள் 2021... 3 விருதுகளை வென்ற Line of Duty, Corobation Street

லண்டன் : மக்களின் அபிமானத்தை பெற்ற டிவி நிகழ்ச்சிகளுக்கு ஆண்டுதோறும் டிவி சாய்ஸ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களிடம் ஆன்லைன் வழியாக ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, இதில் பதிவான ஓட்டுக்களின் அடிப்படையில் இந்த விருதுகள் விளங்கப்படுகிறது.

Tv choice awards 2021 announced

2021 ம் ஆண்டிற்கான டிவி சாய்ஸ் விருது வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. கொரோனா பரவல் நிலை தொடர்வதால் ஆன்லைவில் விர்சுவல் முறையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த விழாவை பிரபல காமெடியன் Rob Beckett தொகுத்து வழங்கினார். ரசிகர்கள் அளித்த ஓட்டுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் Line of Duty மற்றும் Coronation street ஆகியன தலா மூன்று விருதுகளை வென்றுள்ளன.

Line of Duty, சிறந்த தொடர் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றது. இந்த தொடருக்காக Martin Compstion மற்றும் Vicky Mcclure ஆகியோர் முதல் முறையாக விருது பெற்றுள்ளனர்.

Coronation street கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் 60 வது ஆண்டினை கொண்டாடியது. நீண்ட காலம் ஒளிபரப்பான தொடர் என பெருமையை பெற்ற இந்த தொடர் சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட பிரிவுகளில் விருதினை வென்றுள்ளது.

சிறந்த பொழுது போக்கு தொடர் நிகழ்ச்சிக்கான விருதினை Gogglebox & Celebrity Gogglebox பெற்றுள்ளது. சிறந்த குடும்ப தொடருக்கான விருதினை Call The Midwife படம் வென்றது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த விருதினை இந்த தொடர் பெறுகிறது.

சிறந்த புதிய நாடகத்திற்கான விருதினை Bridgeton தொடர் வென்றுள்ளது. James Martin வழங்கும் Saturday Morning சிறந்த சமையல் நிகழ்ச்சிக்கான விருதினை வென்றது. முதல் முறையாக இந்த விருதினை இந்நிகழ்ச்சி பெற்றுள்ளது.

சிறந்த நடிகர் விருதினை Line of Duty தொடருக்காக Martin Compston பெற்றார். இதே தொடருக்காக சிறந்த நடிகைக்கான விருதினை Vicky Mcclure பெற்றார். சிறந்த ரியாலிட்டி ஷோவிற்கான விருதினை I'm a Celebrity...Get Me out of Here பெற்றது.

சிறந்த காமெடி நிகழ்ச்சிக்கான விருதினை The Vicar of Dibley in Lockdown பெற்றது. சிறந்த டேலன்ட் ஷோ விருதினை The Great British Bake Off/The Great Celebrity Bake Off For Stand Up To Cancer/Junior Bake Off பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X