»   »  தேசிய விருது: தமிழ் பாடலுக்கு 10, அதில் வைரமுத்துவுக்கு "7"

தேசிய விருது: தமிழ் பாடலுக்கு 10, அதில் வைரமுத்துவுக்கு "7"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு 7வது முறையாக சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

64வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்திற்கு கிடைத்துள்ளது.

சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது.

தர்மதுரை

தர்மதுரை

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் வந்த எந்தப் பக்கம் பாடலுக்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

7வது முறை

7வது முறை

சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது 7வது முறையாக வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது. மேலும் தமிழ் பாடல் ஆசிரியருக்கு இதுவரை மொத்தம் 10 முறை தேசிய விருது கிடைத்துள்ளது. அதில் 7 முறை விருதை பெற்றவர் வைரமுத்து.

முதல் மரியாதை

முதல் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான முதல் மரியாதை படத்திற்காக 1986ம் ஆண்டு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதை முதல் முறையாக பெற்றார் வைரமுத்து.

ரோஜா

ரோஜா

மணிரத்னம் இயக்கிய ரோஜா(1993) படம், கருத்தம்மா-பவித்ரா(1995), சங்கமம்(2000), கன்னத்தில் முத்தமிட்டால் (2003), தென்மேற்குப் பருவக் காற்று (2011) ஆகிய படங்களுக்காக இதுவரை தேசிய விருது பெற்றுள்ளார் வைரமுத்து.

English summary
Kaviperarasu Vairamuthu has bagged the national film award for best lyricist for the record seventh time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil