»   »  விக்ரம், மீராவுக்கு தேசிய விருது

விக்ரம், மீராவுக்கு தேசிய விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலா இயக்கி, விக்ரம் நடித்த பிதாமகன் படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

பாடமொன்னு விலாபம் என்ற மலையாளப் படத்தில் நடித்ததற்காக மீரா ஜாஸ்மீனுக்கு இந்த விருதுகிடைத்துள்ளது.

சிறந்த நடிகருக்கான போட்டியில் விக்ரம், விருமாண்டியில் நன்றாக நடித்ததற்காக கமல்ஹாசனும்,மலையாள நடிகர் நெடுமுடி வேணு ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இறுதியில்விக்ரம் தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த கமர்சியல் திரைப்படமாக முன்னாபாய் எம்.பி.பி.எஸ் மற்றும் சிறந்த திரைப்படமாக மராட்டியமொழிப் படமான சாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சிறந்த இயக்குனராக வங்க மொழிப் படமான பேம் அபார் அரன்யா என்ற படத்தை இயக்கியகெளதம் கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த திரைக்கதை எழுத்தாளராக அப்பாஸ் (மக்பூல்இந்தித் திரைப்படத்துக்காக) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விருது வழங்கும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அப்துல் கலாம்இந்த விருதை வழங்கவுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil