Don't Miss!
- News
திமுக எம்.எல்.ஏக்கள் அள்ளிக் கொடுத்த 1.29 கோடி! அதிமுக எம்.எல்.ஏக்கள் மனம் இறங்காதது ஏன்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பெல் பாட்டத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.. ஆன்லைனில் லீக்.. அதிர்ச்சியில் படக்குழு!
மும்பை: அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பெல் பாட்டம் படம் வெளியான சில மணி நேரத்திலேயே ஆன்லைனில் லீக்கான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அக்ஷய் குமார். 1991ஆம் ஆண்டு முதல் பாலிவுட் சினிமாவில் கலக்கி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அக்ஷய் குமார்.
சாதியை குறிப்பிட்டு ஓவர் பேச்சு.. 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகும் மீரா மிதுன்!
சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பிலிம் ஃபேர் விருது உட்பட ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள அக்ஷய் குமார், தமிழில் ரஜினியின் 2.0 படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமானார்.

அக்ஷய் குமாரின் பெல் பாட்டம்
நடிகர் அக்ஷய் குமார், இந்தி சினிமாவில் பயோபிக் திரைப்படங்களுக்கு பெயர் போனவர். ஏர்லிஃப்ட், ரஸ்டம், பேட்மேன்,கோல்ட், கேசரி, பிரித்விராஜ் உள்ளிட்ட பயோபிக் படங்களில் அவர் நடித்துள்ளார். அக்ஷய் குமார் நடிப்பில் அண்மையில் வெளி வந்த படம் பெல் பாட்டம்.

விமான கடத்தல் சம்பவம்
பெல் பாட்டம் படம் 1980-களில் விமான கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா முதல் அலையின்போது படப்பிடிப்புக்காக படக்குழு லண்டன் சென்றது.

ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டம்
பின்னர் லண்டனில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியது படக்குழு. இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி எனப் பலரும் இணைந்து தயாரித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டது.

இரண்டாவது அலைக்கு பிறகு
அமேசான் நிறுவனம் இந்தப் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது. ஆனால், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் நேற்று இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் பாலிவுட் பிரபலங்கள் பலரும் படக்குழுவை பாராட்டினர்.

ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்
நேற்று படம் ரிலீஸ் ஆன நிலையில் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் Filmywap ஆகிய பைரசி தளங்கள் படத்தை ஆன்லைனில் லீக் செய்துள்ளன. ஏற்கனவே மக்கள் கொரோனா பீதியில் உள்ள நிலையில் திரையரங்குகளில் கூட்டம் குறைவாகதான் உள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் படம் ரிலீஸ் ஆனதால் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

லண்டனில் மனைவியுடன் படம் பார்த்த
இதனிடையே கடந்த 18 ஆம் தேதி நடிகர் அக்ஷய் குமார் தனது மனைவி டிவிங்கிள் கன்னாவுடன் லண்டனில் பெல் பாட்டம் படத்தை பார்க்க சென்றார். இருவரும் லண்டன் வீதியில் ஜோடியாக சென்ற போட்டோவை டிவிங்கிள் கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.