அமிதாப் பச்சனின் 79வது பிறந்த நாள்… ஒன்று திரண்டு வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!
மும்பை : பிக் பீ, மற்றும் ஷாஹேந்ஷா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன் இன்று தனது 79வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு திரைப்பிரபலங்கள், நெருங்கிய ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அமிதாப் பச்சனின் பிறந்தநாளை முன்னிட்டு இணையத்தில், #HappyBirthdayAmitabhBachchan, #HappyBirthdayBigB ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

அறிமுகம்
1969ல் வெளிவந்த சாட்ஹிந்துஸ்தானி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் அமிதாப் பச்சன். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்கான தேசியத்திரைப்பட விருதை வென்றார்.

பல திரைப்படங்களில்
முதல்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆனந்த், ப்யார் கீ கஹானி, பர்வானா, க்குட்டி, ப்யார் கா கர் போன்ற திரைப்படங்களில் நடித்தார் இதில், ஆனந்த் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

ஷோலே மிகப்பெரிய வெற்றி
ஷோலே என்ற மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படத்தில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகர் என நிலை நிறுத்திக் கொண்டார். 1976 முதல் 1984 வரை பல திரைப்படங்களில் நடித்தார். மேலும், ஷோலே திரைப்படம் பாலிவுட்டின் மேம்பட்ட ஆக்க்ஷன் நாயகன் என்ற புகழை அமிதாப்பிற்கு பெற்றுத்தந்தது.

பல விருதுகள்
பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் அமிதாப் பச்சன். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், தொகுப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்.

Happy Birthday BigB
இந்நிலையில் அமிதாப் பச்சனின் 79வது பிறந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமிதாப்பின் பிறந்த நாளை முன்னிட்டு, முன்னணித் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். இதனால் #HappyBirthdayAmitabhBachchan, #HappyBirthdayBigB ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











