twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழைவிட பழமையான மொழி சமஸ்கிருதம்.. கங்கனா ரனாவத்தின் சர்ச்சை பேச்சு !

    |

    மும்பை : கன்னடம், தமிழ், இந்தியை விட சமஸ்கிருதம் தான் பழமையான மொழி என்பதால் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும் என கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

    Recommended Video

    சமஸ்கிருதம் தான் தேசிய மொழி… மீண்டும் சர்ச்சையை கொளுத்திப்போட்ட கங்கனா ரணாவத்!

    டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவில் பேசிய அமித்ஷா, அப்போது, உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார்.

    அமித்ஷாவின் கருத்தை அடுத்தே இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துக்கள் தமிழகத்தில் வலுப்பெற்றது. அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    வாழ்க்கையில் நான் நம்பிய 3 பெண்கள் என்னை கைவிட்டார்கள்....தனுஷ் வேதனைவாழ்க்கையில் நான் நம்பிய 3 பெண்கள் என்னை கைவிட்டார்கள்....தனுஷ் வேதனை

    கிச்சா சுதீப்

    கிச்சா சுதீப்

    கேஜிஎஃப்-2 பட விழாவில் பேசிய, கன்னட நடிகர் கிச்சா சுதீப், இனிமேலும் இந்தி மொழியை தேசிய மொழி என சொல்ல வேண்டாம். ஒரு கன்னட படம் பான் இந்தியா படமாக எடுக்கப்பட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள், ஆனால் ஒரு சிறிய திருத்தம், இந்தி இனி தேசிய மொழி அல்ல. பாலிவுட்டும் பல பான் இந்தியா திரைப்படங்களைத் தயாரிக்கிறது. அவை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடப்படுகின்றன. ஆனால் வெற்றி பெற போராடுகிறார்கள் என்றார் சுதீப்.

    இந்தி தான் தேசிய மொழி

    இந்தி தான் தேசிய மொழி

    கிச்சா சுதீப்பிற்கு பதிலளிக்கும் வகையில் அஜய் தேவ்கன் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் உங்களை பொறுத்தவரையில் இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? எப்போதும் இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும் என்று பதிவிட்டு இருந்தார். அஜய் தேவ்கனின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    அஜய் தேவ்கனுக்கு ஆதரவு

    அஜய் தேவ்கனுக்கு ஆதரவு

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, அஜய் தேவ்கனுக்கு ஆதரவு தெரிக்கும் வகையில் பேசி உள்ளர். அதில், கங்கனா ரனாவத் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியா மொழிவாரியாக வேற்றுமையுடன் உள்ளது. அனைவரும் ஒன்று சேரவேண்டும், இந்தி தேசிய மொழியாக்கப்பட்டது என்றார்.

    சமஸ்கிருதம் தான் பழமையானது

    சமஸ்கிருதம் தான் பழமையானது

    இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு மொழி விவகாரத்தில் முடிவு எடுக்கப்படவேண்டும். என்னை பொறுத்தவரையில் எந்த மொழி தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்று கேட்டால் சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்று சொல்வேன். இந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், பிரஞ்ச் மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்தே வந்துள்ளன. கன்னடம், குஜராத்தி, தமிழ் போன்ற மொழிகளை விட சமஸ்கிருதம் பழைமையானது. அப்படி இருக்கும் போது சமஸ்கிருதத்தை ஏன் தேசிய மொழியாக்கவில்லை என ஒரு புதுசர்ச்சையை கிளப்பு உள்ளார்.

    English summary
    Bollywood actress Kangana Ranaut said that Sanskrit should be our national language.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X