'செக்ஸ்’ வாழ்க்கையில் எனக்கு அனுபவம் இல்லை..பிரபல இயக்குநரை அசிங்கப்படுத்திய டாப்சி!

மும்பை : பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான டாப்ஸி பன்னு பாலிவுட் இயக்குநர் அசிங்கப்படுத்தும் வகையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். டாப்ஸி தற்போது Dobaaraa என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை டாப்ஸி.

டாப்ஸி

டாப்ஸி

தமிழில் வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை,கேம் ஒவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக டாப்ஸி விஜய் சேதுபதியுடன் அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருந்த டாப்ஸி, சாஷ்டே பதூர் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.

இந்தியில் ஏராளமான படங்களில்

இந்தியில் ஏராளமான படங்களில்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார். மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார் டாப்ஸி. இவர் நடித்த மிஷன் மங்கள்,சாந்த் கி ஆன்க், தப்பத், ஹசீன் தில்ருபா, போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றன.

சபாஷ் மித்து

சபாஷ் மித்து

டாப்ஸி இந்தியில் சபாஷ் மித்து என்ற படத்தில் நடித்திருந்தார். கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'சபாஷ் மிது' திரைப்படத்தில் மிதாலி ராஜாக டாப்ஸி நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூலை வாரிக்குவித்தது. தேவதர்ஷினி, விஜய் ராஜ், மும்தாஜ் சார்கர் உள்ளிட்ட பலர் நடிந்த இப்படத்தை வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

எனக்கு அனுபவம் இல்லை

எனக்கு அனுபவம் இல்லை

தற்போது டாப்சி இந்தியில் Dobaaraa பெயரில் வெளியாக உள்ள படத்தில் நடித்துள்ளார்.த்ரில்லர் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாப்ஸியிடம், பட ப்ரோமோஷன் என்றாலே காபி வித் கரண் நிகழ்ச்சி தான். நீங்கள் ஏன், அதில் கலந்து கொள்ளவில்லை என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டாப்ஸி, காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு செக்ஸ் வாழ்க்கையில் அத்தனை அனுபவம் இல்லை என்று கரண் ஜோகரை அசிங்கப்படுத்தும் அளவுக்கு நக்கலாக பதிலளித்துள்ளார்.

சர்ச்சை கேள்வி

சர்ச்சை கேள்வி

சமீபத்தில்,லைகர் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்தேவர கொண்டாவிடம் கடைசியாக உடலுறவு எப்போது வைத்துக் கொண்டீங்கள் என கரண் ஜோகர் அந்தரங்கமான கேள்வி கேட்டது சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X