கணவர் ரன்வீருக்கு பளார் விட்ட தீபிகா படுகோன்... ஏன் என்னாச்சு... பதறி போன ரசிகர்கள்
மும்பை : பாலிவுட்டின் அழகிய காதல் தம்பதிகளில் ரன்வீர் சிங்கும் - தீபிகா படுகோனும் ஒருவர். இவர்கள் இணைந்திருக்கும் ஃபோட்டோக்கள் ஒவ்வொன்றிலும் தங்களின் காதலையும், சந்தோஷத்தையும் வெளிப்படுத்தக் கூடியவர்கள்.
2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் திருமணம் நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி, மிக எளிய முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. அதே சமயம் பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்று திரள இவர்களின் திருமண வரவேற்பு, மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

கபில்தேவின் வாழ்க்கை படம்
திருமணத்திற்கு பிறகு தீபிகாவும், ரன்வீரும் இணைந்து நடிக்க கையெழுத்திட்ட படம் 83. முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்க்கை படமான இது, 1983 ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை எப்படி வென்றது என்பதை காட்டி உள்ள படம். இந்த படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுப்பாளராகும் ரன்வீர் சிங்
இந்நிலையில் ரன்வீர் விரைவில் டிவியில் க்விஸ் ஷோ ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார். கலர்ஸ் சேனலில் The Big Picture என்ற ஷோவை தான் ரன்வீர் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 16 ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி பற்றி பரபரப்பை கூட்டவும், ரசிகர்களை கவரவும் பலவிதமான ப்ரோமோக்களை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

ரன்வீருக்கு அரை விட்ட தீபிகா
இதில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ப்ரோமோ ஒன்றில், ஒரு கேள்விக்கு தான் சரியாக பதில் சொல்லாததால் தனது மனைவி தீபிகா, தன்னை ஓங்கி கன்னத்தில் பலமாக அரை விட்டதாக கூறினார். இனியும் அப்படி பதில் சொல்லாமல் போனால் என் மனைவி என்னை அடிப்பாள் என வெளிப்படையாக சொன்னார். இந்த ப்ரோமோ வீடியோ செம வைரலாகி வருகிறது.

இது தான் விஷயமா
அப்படி எந்த கேள்விக்கு தவறாக பதில் சொல்லி, ரன்வீர் மாட்டிக் கொண்டார் என விசாரித்த போது, ரன்வீரும் - தீபிகாவும் தங்களின் முதல் திருமண நாளன்று பிரபலமான கோயில் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த கோயிலுக்கு வெளியே கோபுத்திற்கு அருகில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்ட ரன்வீர், எந்த கோயில் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

ஃபோட்டோவால் சிக்கிய ரன்வீர்
ரன்வீர் ரசிகர்களிடம் கேட்ட அதே கேள்வியை தீபிகா, ரன்வீரிடம் கேட்டுள்ளார். அதற்கு ரன்வீர், தெரியவில்லையே என சொல்லி உள்ளார். இதனால் அவரது மனைவி தீபிகா, கணவர் ரன்வீரின் கன்னத்தில் அடித்து விட்டு, சிரித்துள்ளார். இந்த தகவலை தான் ரன்வீர் சிங் ப்ரோமோவில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











