ரசிகரின் காலில் விழுந்த ஹிருத்திக் ரோஷன்...என்ன மனுஷன்யா இவரு ?

மும்பை : பாலிவுட்டின் டாப் நடிகரான ஹிருத்திக் ரோஷன் அடிக்கடி ஏதாவது செய்து மீடியாக்களின் கவனத்தை ஈர்த்து வருபவர். தற்போது மீண்டும் அனைவரும் தன்னை பற்றி பேச வைத்துள்ளார்.

ஹிருத்திக் தற்போது விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் நடித்த கேரக்டரில் சயிஃப் அலிகானும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹிருத்திக் ரோஷனை பார்த்து விட்டு பலரும் விமர்சித்தனர். விஜய் சேதுபதி நடிப்புடன் ஒப்பிட்டு, மீம்ஸ் போடப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

 விக்ரம் வேதா ரிலீஸ் தேதி

விக்ரம் வேதா ரிலீஸ் தேதி

டீசரை பார்க்கும் போது, தமிழ் படத்திலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உருவாக்கி உள்ளார்கள் என தெரிகிறது. சாம் சிஎஸ் பின்னணி இசை கூட அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ரசிகரின் காலில் விழுந்த ஹிருத்திக்

ரசிகரின் காலில் விழுந்த ஹிருத்திக்

படத்தின் ப்ரொமோஷனுக்காக ஹிருத்திக் ரோஷன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதில் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் இருந்த ஹிருத்திக் ரோஷனின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்து வணங்கினார். தனது காலில் விழுந்த ரசிகரின் காலில் ஹிருத்திக் ரோஷனும் விழுந்து வணங்கி உள்ளார்.காலில் விழும் கலாச்சாரம் வடஇந்தியாவில் சாதாரணம் என்றாலும், பெரியவர்களின் காலிலேயே விழ வேண்டும். ஆனால் ஹிருத்திக் செய்துள்ள இந்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

என்ன செய்தாலும் டிரெண்டிங்

என்ன செய்தாலும் டிரெண்டிங்

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. அவர் அழகான மனிதர் மட்டுமல்ல நல்ல மனிதர் என சோஷியல் மீடியாவில் ஹிருத்திக்கை புகழ்ந்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.இதைத் தொடர்ந்து தனது முன்னாள் மனைவி சுசானா மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து ஹிருத்திக் ரோஷன் விருந்தில் பங்கேற்ற ஃபோட்டோவும் வைரலாகி வருகிறது.

ஹிருத்திக்கின் அடுத்த படம்

ஹிருத்திக்கின் அடுத்த படம்


விக்ரம் வேதா படத்தை தொடர்ந்து வார் பட இயக்குநர் சித்தார்த் ஆனந்த்தின் ஃபைட்டர் படத்திலும் நடிக்க ஹிருத்திக் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக தீபிகா படுகோனுக்கு ஜோடியாக ஹிருத்திக் நடிக்க உள்ளார். ஹிருத்திக் ரோஷன் கடைசியாக நடித்த வார் படம் பாக்ஸ் ஆபீசில் சுமார் 300 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X