ஜோஷ் (Josh) ஆப் நடத்த போகும் மாபெரும் மீட்-அப்.. வீடியோ கிரியேட்டர்களுக்கான #LightsCameraJosh!
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம் வருடம்தான் இந்த செயலி தொடங்கப்பட்டு இருந்தாலும் ஏற்கனவே இது டாப் ஷார்ட் வீடியோ செயலியாக உருவெடுத்துவிட்டது. 1000க்கும் அதிகமான சிறப்பான கிரியேட்டர்கள், 15 மில்லியனுக்கும் அதிகமான யூசர் ஜெனரேட்டிங் கிரியேட்டர்களான யுஜிசி கிரியேட்டர்கள், 100 மில்லியனுக்கும் அதிகமான வீடியோ டவுன்லோட்கள் இந்த செயலியில் செய்யப்பட்டுள்ளன.
தனித்துவமான வீடியோக்கள் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஜோஷ் (Josh) ஆப்பிற்கு பயனாளர்கள் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் ஜோஷ் (Josh) ஆப் கடந்த 2021 மார்ச் மாதம் ஹைதராபாத் பார்க் ஹயாத் ஹோட்டலில் #LightsCameraJosh சந்திப்பு நிகழ்வை (மீட் அப்) தொடங்கி வைத்தது. திறமையானவர்களையும், கலைஞர்களையும் ஆதரிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வில் 126 கிரியேட்டர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களில் 20 திறமையான கிரியேட்டர்கள் மட்டும் அடுத்தகட்ட #LightsCameraJosh மீட்டிங் நிகழ்விற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு காரணமாக ஹைதராபாத் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 1.8 மில்லியன் பார்வையளர்களும், 68 கிரியேட்டர்களும் கிடைத்தனர். அதேபோல் ஜோஷ் செயலுக்கு 94.5 மில்லியன் பார்வையளர்கள் கிடைத்தனர்.

இந்த #LightsCameraJosh ன் அடுத்த கட்ட மீட் அப் நிகழ்வு விரைவில் நடக்க உள்ளது. இந்த நிகழ்விற்காக பிரபலமான 200 இன்ஸ்டாகிராம் மற்றும் ஜோஷ் பயனாளர்கள் எல்சிஜெ குர்கிராம் பகுதிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இதற்கு ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன்ஸ் வியசும், ஜோஷ் செயலில் 175 மில்லியன் வியசும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோஷ் கம்யூனிட்டி மூலம் உருவாக்கப்பட்ட இந்த #LightsCameraJosh நிகழ்வு மூலம் பல தளங்களில் இருக்கும் கலைஞர்கள், திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான மேடை அமைத்து கொடுக்கப்படும்.
#LightsCameraJosh போன்ற வித்தியாசமான நிகழ்வுகள் மூலம் ஜோஷ் செயலி மிக குறுகிய காலத்தில் வேகமாக ஆப் உலகில் வளர்ச்சி அடைந்து உள்ளது. இளம் ஸ்டார்கள் மற்றும் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் ஸ்டார்களுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்துவதற்கான பாலமாக இந்த நிகழ்வு அமைந்து உள்ளது. #LightsCameraJosh என்ற ஹேஷ்டேக்கிற்கு ஏற்கனவே 10.8 மில்லியன் ஹார்ட்களும், 94 மில்லியன் வியூஸ்களும் உள்ளன.
இந்தியாவிலேயே ஷார்ட் வீடியோ செயலி மூலம் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஹிந்தி மீட் ஆப் இதுவாக இருக்க போகிறது. டாப் வீடியோ கிரியேட்டரான 2.4 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் கொண்ட சுவாதி (எ) @fairytale_swati இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இவர் பேஷன், டான்ஸ், பயணம் உள்ளிட்ட பல பிரிவுகளில் இவர் வீடியோ வெளியிட்டு வருகிறார். வைரல் பாடகர் வீஜிதா, பேஷன் பியூட்டி வீடியோவை வெளியிடும் தீப்தி சர்மா ஆகியோர் இந்த கூட்ட நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களை போன்ற ஜோஷ் நிகழ்வின் டாப் கிரியேட்டர்ஸ் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
வீடியோ கிரியேட்டர்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்த நிகழ்வு மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளம் உருவாக உள்ளது. இந்த நிகழ்வு மிக பிரமாண்டமாக, சுவாரசியமாக நடக்க உள்ளது. ஜோஷ் கம்யூனிட்டியுடன் புதிய கிரியேட்டர்கள் கலந்துரையாட இந்த நிகழ்வு தளம் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது. இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் பல்வேறு டாப் கிரியேட்டர்களுடன் இணைந்து பல பிரமிக்கவைக்கும் சுவாரசியமான நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.
#LightsCameraJosh நிகழ்வு குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள்.


Click it and Unblock the Notifications











