twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அபராத தொகை குறைப்பு... நன்றி சொன்ன ஜூகி சாவ்லா !

    |

    சென்னை : இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஜூகி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை டெல்லி உயர்நீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டுள்ளது.

    பாலிவுட்டில் முக்கியமானக நடிகைகளில் ஜூகி சாவ்லாவும் ஒருவர், 90 கால கட்டத்தில் இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கொடிகட்டி பறந்தார்.

    இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நாட்டுக்கு ஒரு நல்லவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    '83' மூவியில் ஸ்ரீகாந்த் ரோல்...ஒரே படத்தில் இந்திய நடிகர் அந்தஸ்த்துக்கு உயர்ந்த ஜீவா'83' மூவியில் ஸ்ரீகாந்த் ரோல்...ஒரே படத்தில் இந்திய நடிகர் அந்தஸ்த்துக்கு உயர்ந்த ஜீவா

    ஜூகி சாவ்லா

    ஜூகி சாவ்லா

    இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பத்தை தொடர்ந்து 5ஜி தொழில்நுட்ப சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தால் பூமியில் உள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இந்த தொழில்நுட்பத்தை அனுமதிக்க கூடாது என்று பிரபல நடிகை ஜூகி சாவ்லா உள்பட 4 பேர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வெற்று விளம்பரத்திற்காக

    வெற்று விளம்பரத்திற்காக

    இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெஆர். மிதா கடந்த ஆண்டு, நடிகை ஜூஹி சாவ்லாவின் மனுவை தள்ளுபடி செய்தார். அதோடு வெற்று விளம்பரத்திற்காக விளம்பரத்திற்காக ஜூஹி சாவ்லா இம்மனுவை தாக்கல் செய்திருப்பதாக கூறி ரூ.20 லட்சம் அபராதமும் விதித்தார்.

    அபராதம் குறைப்பு

    அபராதம் குறைப்பு

    இதையடுத்து இந்த அபராத தொகையை குறைக்க கோரி ஜூகி சாவ்லா மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, ஜூகி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் பிரபலமானவராக இருப்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொது நிகழ்ச்சியிலும், பொது சேவைகளுக்கும் அவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

    ட்விட்டரில் நன்றி

    ட்விட்டரில் நன்றி

    அபராதத் தொகை குறைக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ள ஜூகி சாவ்லா, டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன். அபராதத்தை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக குறைத்ததற்கு நன்றி. பொது நிகழ்ச்சியில், சமூக சேவையிலும் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூகி சாவ்லா கூறியுள்ளார்.

    English summary
    Juhi Chawla welcoming the Delhi High Court’s order of reducing the fine,ஜூகி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை குறைப்பு
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X