பிரம்மாஸ்திரம் இயக்குநரை பாராட்டுபவர்களை ஜெயிலில் புடிச்சு போடுங்க.. கங்கனா ரனாவத் காட்டம்.. ஏன்?

மும்பை: பாய்காட் பாலிவுட் எதிர்ப்பையும் தாண்டி பிரம்மாஸ்திரம் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 55 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கான அட்வான்ஸ் புக்கிங் அனல் பறக்கிறதாம்.

இந்நிலையில், பிரம்மாஸ்திரம் இயக்குநர் அயன் முகர்ஜியை ஜீனியஸ் என பாராட்டுபவர்களை சிறையில் தள்ள வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் காட்டமான பதிவை போட்டுள்ளார்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மெளனி ராய் மற்றும் ஷாருக்கான் நடிப்பில் உருவான பிரம்மாஸ்திரம் செப்டம்பர் 9ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. படத்தை டிசாஸ்டர் ஆக்க வேண்டும் என நினைத்து வேலை செய்தவர்களின் கனவு நிறைவேறவில்லை. இந்நிலையில், கங்கனா ரனாவத் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இயக்குநர் அயன் முகர்ஜி மீது அடுக்கி உள்ளார்.

ஜெயில்ல போடணும்

ஜெயில்ல போடணும்

லாக்கப் எனும் ஓடிடி ரியாலிட்டி ஷோவை நடத்தி வந்த கங்கனா ரனாவத் பிரம்மாஸ்திரம் பட இயக்குநரை யாராவது ஜீனியஸ்னு சொன்னால் அவங்களை தூக்கி ஜெயிலில் போடணும் என ரொம்பவே காட்டமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படியொரு போஸ்ட்டை போட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

600 கோடி காலி

600 கோடி காலி

இந்த ஒரு படத்தை எடுக்கிறேன்னு அயன் முகர்ஜி கடந்த 12 வருடங்களில் 14 கேமராமேன்களை மாற்றி விட்டார். 85 உதவி இயக்குநர்களையும் மாற்றி உள்ளார். 400 நாட்களுக்கு மேல் ஷூட் செய்து தயாரிப்பாளரின் 600 கோடி ரூபாயை கரியாக்கி உள்ளார். இவரை போன்ற ஒரு முட்டாளை எப்படித்தான் ஜீனியஸ்னு சொல்றீங்களே என விளாசி உள்ளார்.

இந்துக்களை மயக்க

இந்துக்களை மயக்க

ஜலாலுதின் ரூமி என்றே ஆரம்பத்தில் இந்த படத்தின் நாயகன் ரன்பீர் கபூருக்கு இயக்குநர் பெயர் வைத்திருந்தார். ஆனால், இந்து மக்களை தியேட்டருக்கு வரவழைக்க கடைசி நேரத்தில் ஷிவா என இந்துக் கடவுளின் பெயரை வைத்து விட்டார் இயக்குநர் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

பாகுபலி வெற்றி

பாகுபலி வெற்றி

பாகுபலி படத்தின் வெற்றியால் அந்த படத்தின் நாயகன் பிரபாஸுக்கு வைக்கப்பட்ட அதே ஷிவா என்கிற பெயரையே காப்பி பேஸ்ட் செய்துள்ளார். இப்படியொரு சொதப்பல் இயக்குநரை ரசிகர்கள் எப்படித்தான் கொண்டாடுகிறார்களோ என கேள்வி எழுப்பி உள்ளார். தாகத் படத்தை இயக்கிய இயக்குநர் தான் ஜீனியஸ் என சொல்லணுமா? என நெட்டிசன்கல் கங்கனா ரனாவத்தை பதிலுக்கு கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X