கங்கனா ரனாவத்தின் ‘தாகத்‘ படுமோசமான தோல்வி..மனம் நொந்த தயாரிப்பாளர்!

மும்பை : பாலிவுட் குயின் கங்கனா ரனாவத் நடித்த தாகத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் அர்ஜுன் ராம் பால், திவ்யா தத்தா, சஸ்வதா சாட்டர்ஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பல கோடி ரூபாய் முதலீட்டில் வெளியான இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. படம் ரிலீஸான 8 ஆவது நாளில் வெறும் 20 டிக்கெட்கள் மற்றுமே விற்பனை ஆகி அன்றைய வசூல் சுமார் 4420 ரூபாய்தான் என்றும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பின.

சுமார் 90 கோடியில் உருவான திரைப்படம் திரையரங்குகள் மூலமாக 5 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை என்று சொல்லப்பட்டது.

கடினமாக உழைத்தோம்

கடினமாக உழைத்தோம்

இதுகுறித்து தாகத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தீபக் முகுத் இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்துள்ள பேட்டியில், படம் தோல்வி குறித்து மனம் திறந்து பேசினார். அதில், நாங்கள் 'தாகத்' திரைப்படத்தை மிகவும் நம்பிக்கையுடன் உருவாக்கினோம், கடின உழைப்பை போட்டு மிகவும் நன்றாக தயாரிக்கப்பட்ட படம். ஆனால், என்ன தவறு நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

இது மக்களின் தீர்ப்பு

இது மக்களின் தீர்ப்பு

இது மக்களின் விருப்பம், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் அதனால், இந்த தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும், தாகத் திரைப்படத்தால் ஏற்பட்ட இழப்பால், எனது அலுவலகம் விற்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது முற்றிலும் ஆதாரமற்ற தகவல் என்றும், முடிந்த வரை இழப்பை சரிசெய்து விட்டேன். இன்னும் ஒரு சில பிரச்சனைகள் மட்டுமே இருப்பதாக கூறினார்.

படுமோசமான தோல்வி

படுமோசமான தோல்வி

கங்கனா ரணாவத்தின் Dhaakad படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்ததை அடுத்து, படத்தின் சாட்டிலைட் மற்றும் OTT உரிமையைப் பெறுவதற்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்ற தகவலை மறுத்த தயாரிப்பாளர், இது முற்றிலும் பொய்யான தகவல், Dhaakad திரைப்படம் Zee5 க்கு விற்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கங்கனாவின் நம்பிக்கை பதிவு

கங்கனாவின் நம்பிக்கை பதிவு

இந்நிலையில், கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தாகத்தின் தோல்வி குறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் ராணி என்று தன்னைப் புகழ்ந்த ஒரு கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ள கங்கனா, 2019 மணிகர்னிகா 160 கோடி வசூலித்தது. 2020 கோவிட் ஆண்டு, 2021, என் கேரியரில் மிகப்பெரிய படம் தலைவி. இப்படம் ஓடிடியில் வெளியாகி வெற்றியைப் பெற்றது. நான் பல ஏற்றத்தாழ்வுகளை பார்த்து இருக்கிறேன். ஆனால் 2022 ஆம் அண்டு பிளாக்பஸ்டர் ஆண்டாகும், அது இன்னும் முடிவடையவில்லை. இதன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X