கோயிலுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்ட ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடி: இது தான் காரணமா?

உஜ்ஜைன்: ரன்பீர் கபூர், ஆலியாபட் நடித்துள்ள பிரம்மாஸ்த்திர திரைப்படம் நாளை ( செப் 9) திரையரங்குகளில் வெளியாகிறது.

அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசம் உஜ்ஜைனியின் உள்ள காளி கோயிலுக்குச் சென்ற ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிரம்மாண்டமாக வெளியாகும் பிரம்மாஸ்திரா

பிரம்மாண்டமாக வெளியாகும் பிரம்மாஸ்திரா

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடி, பிரம்மாஸ்திரா படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இத்திரைப்படம், மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் மூன்று பாகங்களாக உருவாகியுள்ளது. ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், டோலிவுட் டாப் ஸ்டார் நாகர்ஜுனா ஆகியோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். தொடர்ச்சியாக பாலிவுட் திரைப்படங்கள் பாய்காட் செய்யப்படுவதால், மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், பிரம்மாஸ்திரா படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயிலுக்குள் செல்லவிடாமல் போராட்டம்

கோயிலுக்குள் செல்லவிடாமல் போராட்டம்

பிரம்மாஸ்திரா திரைப்படம் வெளியீட்டை முன்னிட்டு, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர், தொடர்ந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். பிரம்மாஸ்திரா பான் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், மத்தியபிரதேசம் உஜ்ஜையினில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் கோயிலில் ரன்பீர் கபூரும் ஆலியா ப்ட்டும் வழிபட சென்றனர். ஆனால், இந்து அமைப்பினர் சிலர் ரன்பீர் கபூரையும் ஆலியா பட்டையும் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என கோஷமிட்டு கறுப்புக் கொடி காட்டியுள்ளனர்.

போலீஸார் நடத்திய தடியடி

போலீஸார் நடத்திய தடியடி

ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், கோயில் வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், கறுப்புக் கொடி காட்டியவர்கள் மீது லேசான தடியடி நடத்தி விரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும், ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரையும் பாதுகாப்பாக கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபட வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலிவுட் முன்னணி நடிகர்கள் தொடர்ந்து எதாவது ஒருவகையில் குறிவைத்து தாக்கப்படுவது, இந்தி திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எதிர்ப்புக்கு இதுதான் காரணமா?

எதிர்ப்புக்கு இதுதான் காரணமா?

இந்நிலையில், ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரையும் கோயிலுக்குள் விடாமல் இந்து அமைப்பினர் தடுத்ததன் காரணம் தெரியவந்துள்ளது. 2011ல் ரன்பீர் கபூர் தனது பட விளம்பர நிகழ்ச்சியில், மாட்டிறைச்சி தனக்கு பிடிக்கும் எனத் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி, ரன்பீர் கபூர், ஆலியா பட்டை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரம்மாஸ்திரா இயக்குநர் அயன் முகர்ஜி, "ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் என்னுடன் கோயிலுக்குள் வரமுடியாமல் போனது வேதனையானது" எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X