Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ரோஹித் சர்மா அனுஷ்கா ஷர்மாவின் சகோதரரா?... என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க !
மும்பை : ரோஹித் சர்மா அனுஷ்கா ஷர்மாவின் சகோதரரா? என்ற கேள்வி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இதற்கு இணையவாசிகள் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மீம்ஸ் கிரியேட்டர்களும் காமெடியான மீம்ஸ்களை வெளியிட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இந்தியா முன்னிலை
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 162 ரன்கள் அடித்த நிலையில், அடுத்து களமிறங்கிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

சகோதரரா?
டி20 தொடர் முதல் வெற்றியை இந்தியா சுவைத்த நிலையில் Quora கேள்வி பதில் இணையதளத்தில் ஓரு சுவாரசியமான தகவல் உலாவி வருகிறது. இதில் ரோஹித் சர்மா அனுஷ்கா ஷர்மாவின் சகோதரரா? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 7 மாதங்களுக்கு முன் இந்த கேள்வி இணையத்தில் கேட்கப்பட்ட நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது. இந்த கேள்வியை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என தெரியாமல் ரசிகர்கள் கண்டபடி கிண்டலடித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

என்னடா பண்றீங்க
என்னடா பண்றீங்க, சர்மானு பெயர் வைச்சது ஒரு குத்தமா ? ரோஹித் ஷர்மா மட்டும் அனுஷ்காவின் சகோதரர் இல்லை இஷாந்த் சர்மா, சந்தீப் ஷர்மா, மோஹித் சர்மா இன்னும் என்னென்ன சர்மா வருதோ அனைவருமே ஒரே குடும்பம் தான் என்றும், ஷிகர் தவான், ரிஷி தவான் மற்றும் வருண் தவான் அனைவருமே அண்ணன் தம்பிங்கதான் என்றும் கேலியான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இணையத்தில் இந்த தகவல் தற்போது டிரெண்டிங்காகி வருகிறது.

அனுஷ்கா ஷர்மா
பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மனைவி ஆவார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு வாமிகா என பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் வாமிகாவின் போட்டோ வைரலானதை அடுத்து அந்த புகைப்படத்தை பகிரவேண்டாம் என ஊடகங்களுக்கு அனுஷ்கா ஷர்மா வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.