25 கோடி பேரம் பேசிய விவகாரம்.. விசாரணைக்கு ஆஜராக டைம் கேட்கும் ஷாருக்கான் மேனேஜர்.. என்ன நடக்கிறது?

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரி சமீர் வான்கடே அதிரடியாக மாற்றப்பட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பாக ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானியிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால், உடல்நலக் குறைவை காரணம் காட்டி பூஜா தத்லானி விசாரணைக்கு ஆஜராக நேரம் கேட்டுள்ளார்.

ஆர்யான் கான் கைது

ஆர்யான் கான் கைது

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் சொகுசு கப்பலில் நடந்த போதைப் பார்ட்டியில் கலந்து கொண்டு தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தினார் என குற்றம்சாட்டப்பட்டது. ஆர்யான் கானை அதிரடியாக கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

2 வாரங்கள் சிறையில்

2 வாரங்கள் சிறையில்

மகனை உடனடியாக காப்பாற்ற சட்ட ரீதியாக ஏகப்பட்ட முயற்சிகளை நடிகர் ஷாருக்கான் மேற்கொண்டார். ஆனால், இரண்டு வாரங்கள் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் அவர் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர், மும்பை நீதிமன்றம் ஆர்யான் கானுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், மகனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார் ஷாருக்கான்.

அதிகாரி மாற்றம்

அதிகாரி மாற்றம்

போதை புகாரில் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டது திட்டமிட்ட சதி என்கிற பேச்சுக்களும் இதில் அரசியல் உள்ளது என்கிற கூற்றுகளும் பாலிவுட்டில் எழுந்தது. மேலும், ஆர்யான் கான் வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த போலீஸ் அதிகாரி சமீர் வான்கடே மீது லஞ்ச புகார் எழுப்பப்பட்ட நிலையில், அவர் அதிரடியாக இந்த வழக்கில் இருந்து மாற்றப்பட்டார்.

25 கோடி பேரம்

25 கோடி பேரம்

ஆர்யான் கானை விடுதலை செய்ய வேண்டுமென்றால் 25 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானியிடம் தொழிலதிபர் சாம் டிசோசா மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சாட்சி கிரண் கோசாவி மூலம் பேரம் பேசப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

பூஜாவுக்கு சம்மன்

பூஜாவுக்கு சம்மன்

ஷாருக்கானின் மேனேஜரிடம் 25 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும் 50 லட்சம் ரூபாய் பணத்தை அவர் முதல் தவணையாக கொடுத்தார் என்றும் பின்னர் இது ஒரு மோசடி என்று தெரிந்து கொண்டு பணத்தை திரும்பப் பெற்றனர் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பூஜா தத்லானியிடம் விசாரணை மேற்கொள்ள அவருக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

டைம் கேட்கும் பூஜா

டைம் கேட்கும் பூஜா

திங்கட்கிழமையான நேற்று பூஜா தத்லானி இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் சிறிது கால அவகாசம் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். பூஜா தத்லானியை மட்டுமின்றி மேலும், 11 பேரிடம் இது தொடர்பான விசாரணையை மும்பை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X