Don't Miss!
- News
பெரும் பதற்றம்.. நாகையில் வெடித்த பாஜக-காங்கிரஸ் மோதல்! பிபிசி ஆவணப்படத்தை பாதியில் நிறுத்திய போலீஸ்
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Finance
அடேங்கப்பா.. Hindenburg எஃபெக்ட்.. கௌதம் அதானி சொத்து மதிப்பில் பெரிய ஓட்டை..!
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Automobiles
2.5 கோடி இதயங்களை வென்ற மாருதி! டாடா, ஹூண்டாய் எல்லாம் பக்கத்துலகூட வர முடியாது
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
- Technology
பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.! திறமையாகக் கண்டுபிடித்த இந்தியர்கள்.!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ஆலியா பட் நடிப்பில் சர்ச்சையை கிளப்பிய ‘டார்லிங்ஸ்’ திரைப்படம்: தமிழில் ரீமேக் செய்யும் ஷாருக்கான்
மும்பை: பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட் நடிப்பில் 'டார்லிங்ஸ்' என்ற படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
கணவரை கொடுமையாக தாக்கும் மனைவி பாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருந்தது சர்ச்சையை கிளப்பியது.
இந்தப் படம் தற்போது ஷாருக்கான் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.
3
கேர்ள்ஃபிரெண்ட்..
ராயல்
என்ஃபீல்ட்ல
டெலிவரி
பாய்
வேலை..
தனுஷை
பங்கமாக
கலாய்க்கும்
நெட்டிசன்கள்!

சர்ச்சையை ஏற்படுத்திய ஆலியா பட்
பாலிவுட் முன்னணி நடிகையான ஆலியா பட் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'கங்குபாய் கத்தியாவாடி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவருக்கும் ரன்பீர் கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த வாரம் 5ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான 'டார்லிங்ஸ்' படத்தில் ஆலியா பட் நடித்திருந்தார். இந்தப் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கணவரை கொடூரமாக தாக்கும் ஆலியா பட்
'டார்லிங்ஸ்' படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே, ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், படமும் வெளியாகி இன்னும் சர்ச்சையாகிப் போனது. 'டார்லிங்ஸ்' படத்தில் ஆலியா பட் தனது கணவரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு ஆண்கள் அமைப்புகள் உட்பட பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், ஆலியா பட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் டார்லிங்ஸ்
இந்தியில் உருவான 'டார்லிங்ஸ்' படத்தை ஷாருக்கான் தனது ரெட் சில்லிஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இந்தியிலேயே பயங்கரமான எதிர்ப்பையும் விமர்சனங்களையும் சந்தித்த இந்தப் படத்தை, இப்போது தமிழ், தெலுங்கிலும் தயாரிக்க ஷாருக்கான் முடிவு செய்துள்ளாராம். அதனை அபிசியலாகவும் அறிவித்து தமிழ் ரசிகர்களை ஆட்டம் காண வைத்துள்ளார்.

தமிழுக்கு ஏற்ப கதையில் மாற்றம்
மேலும், ஷாருக்கான் தரப்பில் இருந்து இதுகுறித்து மேலும் சில அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்திப் படத்தை இயக்கிய ஜஸ்மீத் கே ரீன் தான், தமிழிலும் தெலுங்கிலும் டார்லிங்ஸ் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில். ஷெபாலி ஷா, விஜய் வர்மா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பதாகவும் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் உருவாகும் எனவும், ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இந்த அப்டே தமிழ் ரசிகர்களையும் சூடாக்கியுள்ளது.