ஆபாச பட விவகாரம்.. அவரு காசு ஒரு பைசா வேண்டாம்.. குந்தைகளுடன் கணவரை பிரியும் நடிகை ஷில்பா ஷெட்டி!

மும்பை: ஆபாச பட விவகாரத்தில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி கணவரை பிரியும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளுல் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. 40 வயதை தாண்டிய ஷில்பா ஷெட்டி இன்னமும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உடலை மெயின்டெய்ன் செய்து வருகிறார்.

இந்தியில் முன்னணி நடிகர்களுடன் எராளமான படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி, தமிழில் விஜய்யின் குஷி படத்திலும் நடித்துள்ளார். குஷி படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு நடனமாடினார் ஷில்பா ஷெட்டி.

ராஜ் குந்தராவுடன் திருமணம்

ராஜ் குந்தராவுடன் திருமணம்

இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2019ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்
ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா

கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா

கடந்த பிப்ரவரி மாதமே அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போதிய ஆதாரத்திற்காக காத்திருந்தது மும்பை போலீஸ். இந்நிலையில் ஆதாரங்களுடன் ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர். ஆபாச படம் தயாரித்து வெளியிட்ட ராஜ் குந்த்ரா, அதற்கான ஆடிஷனில் பங்கேற்ற சில நடிகைகளை ஆடையின்றி நிர்வாணமாக நடிக்க கூறியதாக புகார் எழுந்தது.

ஆதாரங்களை கைப்பற்றிய மும்பை போலீஸ்

ஆதாரங்களை கைப்பற்றிய மும்பை போலீஸ்

இதனை தொடர்ந்து ராஜ் குந்த்ரா தனது பார்ட்னர்களுடன் ஆபாச படம் தொடர்பாக பேசிய வாட்ஸ் அப் உரையாடல்கள்
உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது அலுவலகத்திலும் போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பல ஆபாச பட சிடிக்கள் கைப்பற்றப்பட்டன.

இப்படி சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன?

இப்படி சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன?

அதோடு ராஜ் குந்த்ராவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற போலீசார் வீட்டிலேயும் விசாரணை நடத்தினர். அப்போது ஷில்பா ஷெட்டி குடும்ப மானமே போய்விட்டது என்றும் என்ன குறைச்சலாக இருக்கிறது என்றும் இப்படி சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டும் கணவர் ராஜ் குந்த்ராவிடம் கதறி அழுததாகவும் தகவல் வெளியானது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தில் உடன் சென்ற போலீசார் தலையிட்டு தீர்த்து வைத்ததாகவும் கூறப்பட்டது.

மீண்டும் படப்பிடிப்பில் ஷில்பா ஷெட்டி

மீண்டும் படப்பிடிப்பில் ஷில்பா ஷெட்டி

கணவர் கைது செய்யப்பட்டதால் மன வேதனையில் இருந்த ஷில்பா ஷெட்டி கடந்த 3 வாரங்களாக தான் பங்கேற்ற சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் ஷில்பா ஷெட்டி. ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களையும் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

ஷில்பா ஷெட்டியின் நண்பர்

ஷில்பா ஷெட்டியின் நண்பர்

இந்நிலையில் ஷில்பா ஷெட்டி குழந்தைகளுடன் தனது கணவரை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் ஷில்பா ஷெட்டியின் நெருங்கிய நண்பர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நண்பர் தெரிவித்திருப்பதாவது, ராஜ் குந்த்ராவின் பிரச்சனை இப்போது தீராது. வாரா வாராம் இந்த விவகாரம் பெரிதாகி கொண்டேதான் செல்கிறது.

கணவரிடமிருந்து விலக முடிவு

கணவரிடமிருந்து விலக முடிவு

ராஜ் குந்த்ரா அடல்ட் படங்களை தயாரித்து வெளியிட்டிருப்பது ஷில்பா ஷெட்டியை போன்று எங்களுக்கும் அதிர்ச்சியாகதான் உள்ளது. வைரங்கள் மற்றும் டூப்ளக்ஸ் இதுபோன்ற மோசமான ஆதாரங்களில் இருந்து தான் வருகிறது என்பது அவருக்கு தெரியாது. மேலும், ஷில்பா ஷெட்டி தனது கணவர் செய்த தவறுகள் மூலம் சம்பாதித்த அனைத்து பணத்திலும் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவருடைய நண்பர் கூறியுள்ளார்.

ஒரு பைசா வேண்டாம்

ஒரு பைசா வேண்டாம்

எங்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து குந்த்ராவின் சொத்துக்களில் ஒரு பைசாவையும் அவர் தொடமாட்டார் என்றும் அந்த நண்பர் கூறியுள்ளார். ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்பதன் மூலம் அவர் கணிசமான தொகையை சம்பாதித்து வருகிறார். மேலும் ஹங்கமா 2 மற்றும் நிக்கம்மா படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் பல பட வாய்ப்புகளையும் பெற்றுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

எந்த பிரச்சனையும் இருக்காது

எந்த பிரச்சனையும் இருக்காது

சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள தனது நண்பர்களிடம் தான் வேலை செய்யத் தயாராக இருப்பதாகவும், நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அனுராக் பாசு மற்றும் இயக்குநர் பிரியதர்ஷனிடமிருந்தும் வாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். அவருடைய நண்பரின் கூற்றுப்படி, ஷில்பாவுக்கு வசதியான வாழ்க்கை வாழ்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என தெரிகிறது.

பாலிவுட்டில் பெரும் பரபரப்பு

பாலிவுட்டில் பெரும் பரபரப்பு

மேலும் 'கணவர் நீண்ட நாட்கள் உள்ளே இருந்தாலும் ஷில்பாவின் வாழ்க்கைத் தரத்தை பராமரிப்பது ஒரு பிரச்சனையாக இருக்காது' என்றும் அந்த நண்பர் கூறியுள்ளார். நடிகை ஷில்பா ஷெட்டி கணவரை பிரிய உள்ளதாக பரவும் தகவல் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X