ரசிகர்கள் என்னை அப்படி பார்க்கத்தான் விரும்புகிறார்கள்… சன்னி லியோன் ஓபன் டாக் !

மும்பை : பாலிவுட் நடிகை சன்னிலியோன், அனாமிகா படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சுவாரசியமான சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், நான் ரசிகர்களை விரும்புகிறேன், அவர்களும் என்னை விரும்புகிறார்கள், ரசிகர்கள் என்னை அப்படி பார்க்கத்தான் விரும்புகிறார்கள் என்று மனம் திறந்து பேசினார்.

நடிகை சன்னி லியோன் அரை டசன் படங்களுக்கு மேல் கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

கனடாவில் பிறந்தார்

கனடாவில் பிறந்தார்

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன் அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பின.

கவர்ச்சி புயல்

கவர்ச்சி புயல்

கவர்ச்சி புயல் என்று பெயர் எடுத்த சன்னி லியோ கணவர் டேனியல் வெப்பார் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் 2017ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர். 2018ம் ஆண்டு வாடகைத்தாய் வாயிலாக இரட்டை ஆண் குழந்தை பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு ஆசேர் மற்றும் நோவா சிங் என பெயர் சூட்டி 3 குழந்தைகளையும் அன்போடும் பாசத்தோடும் வளர்ந்து வருகிறார் சன்னி லியோன்.

சுவாரசிய பேட்டி

சுவாரசிய பேட்டி

சன்னி லியோன் ரங்கீலா, ஓ மை கோஷ்ட், பட்டா, அனாமிகா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த சன்னி, அனாமிகா படப்பிடிப்பு தளத்தில் நடத்த பல சுவாரசியமாகக தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், எனக்கு சண்டை காட்சிகள் என்றால் மிகவும் பிடிக்கும். நிஜ வாழ்க்கையில் நான் எப்பொழுதும் சண்டை போடமாட்டேன்.

மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள்

மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள்

அதனால் இந்த வித்தியாசமான விஷயங்களை கற்றுக்கொள்வது சந்தோஷமாக இருந்தது. விக்ரம் சாரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். நான் என் ரசிகர்களை நேசிக்கிறேன், அவர்களும் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுக்காக தொடர்ந்து நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பேன். ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நான் ஆசைபடுகிறேன். எனவே நான் வித்தியாசமான விஷயங்களைச் செய்து, எனது திறமையை நிரூபிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X