இவரு பாலிவுட் ப்ளூ சட்டையா இருப்பாரு போல.. பிரம்மாஸ்திரம் படத்தோட சோலியை இப்படி முடிச்சிட்டாரே!
மும்பை: பிரபல பாலிவுட் விமர்சகர் தரண் ஆதர்ஷ் திடீரென ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறார்.
அதற்கு காரணம் 410 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் பிரம்மாஸ்திரம் படத்துக்கு அவர் கொடுத்த ஒரு வார்த்தை விமர்சனம் தான்.
தரண் ஆதார்ஷ் பாலிவுட்டின் ப்ளூ சட்டையா என இங்குள்ள ரசிகர்களே கமெண்ட்டுகளை போடும் அளவுக்கு டிரெண்டாகி உள்ளார்.

பிரம்மாஸ்திரத்துக்கே தோல்வியா
அஸ்திரங்களிலேயே பெரிய அஸ்திரம் என புராணங்களில் கருதப்படுவது பிரம்மாஸ்திரம் தான். சிவனின் சூலம், விஷ்ணுவின் சங்குச் சக்கரம் போன்ற அஸ்திரங்களுக்கு எல்லாம் விட பெரியது அது என்கிற ஐதீகம் உள்ளது. அப்படியொரு அஸ்திரத்தை கதையாக கொண்டு பாலிவுட்டில் 410 கோடி செலவு செய்து 5 ஆண்டுகள் கடும் உழைப்பைக் கொட்டிய நிலையிலும், படம் அப்படியே மார்வெல் படங்களின் காப்பி என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஒரு வார்த்தையில் க்ளோஸ்
காலையில் இருந்தே பிரம்மாஸ்திரம் படத்துக்கு ஓவர் பாசிட்டிவ் ரேட்டிங் ஒரு புறமும், ஓவர் நெகட்டிவ் ரேட்டிங் மறுபுறம் என ரசிகர்களை நெட்டிசன்கள் அதிகமாகவே குழப்பி விட்டனர். இந்நிலையில், பாலிவுட் விமர்சகரும் சினிமா டிராக்கருமான தரண் ஆதர்ஷ் தனது one word review ஹாஷ்டேக்கில் Dissappointing என போட்டு வெறும் 2 ரேட்டிங் மட்டுமே கொடுத்தது ஒட்டுமொத்த பாலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

டிரெண்டிங்கில் தரண் ஆதர்ஷ்
தரண் ஆதர்ஷ் பெயரை போட்டு தற்போது பாய்காட் பாலிவுட் கேங் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். கடைசி நேரத்தில் படத்தின் புரமோஷனுக்காக இந்து கோயில்களுக்கு சென்று இந்து மக்களை ஏமாற்ற முடியாது. உண்மை உலகுக்கு தெரிந்து விட்டது என ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

பாலிவுட் ப்ளூ சட்டை மாறன்
சில ரசிகர்கள் இவர் என்னடா பாலிவுட்டின் ப்ளூ சட்டை மாறன் மாதிரி படம் வெளியான முதல் ஷோவிலேயே இப்படியொரு நெகட்டிவ் விமர்சனத்தை போட்டுத் தாக்கி உள்ளாரே என கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் சமீப காலமாக கடுமையான வெறுப்பையும் இவர் சந்தித்து வருகிறார்.

ஷாருக்கான் கேமியோ பண்ணாலே
ட்யூப்லைட், ராக்கெட்ரி, லால் சிங் சத்தா வரிசையில் பிரம்மாஸ்திரத்தையும் கேமியோ பண்றேங்கிற பேரில் காலி செய்து விட்டார் ஷாருக்கான் என அவருக்கு எதிராகவும் ட்ரோல்கள் பறக்கின்றன. பிரம்மாஸ்திரா படத்துக்கு நேர்ந்த கதிதான் பதான், ஜவான் மற்றும் டங்கி படத்துக்கும் நேரும் என எச்சரித்து வருகின்றனர்.

இவரு சொல்றதெல்லாம் பொய்
ஆப்போசிட் பார்ட்டிக்கிட்ட பணம் வாங்கிட்டு தரண் ஆதர்ஷ் இப்படி ஃபேக்கான விமர்சனங்களை போட்டு வருகிறார் என்றும், படத்தை பார்த்து நல்ல படமா இல்லையா என்பதை ரசிகர்கள் முடிவு செய்யட்டும். இதுபோன்ற ஃபேக் விமர்சகர்களால் தான் பாலிவுட் சினிமா பாதாளத்துக்கு சென்று விட்டது என தரண் ஆதர்ஷை ரன்பீர் கபூர், ஆலியா பட் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











