விக்ரம் வேதா விஜய் சேதுபதியின் 'அற்புதமான' பர்ஃபாமன்ஸ்..மிரண்டுபோய் பாராட்டும் ஹிர்த்திக் ரோஷன்

விக்ரம் வேதா படம் இந்தியில் அதே இயக்குநர்களால் இயக்கப்பட்டு நாளை ரிலீசாகிறது. அதில் விஜய் சேதுபதி ரோலில் ஹிர்திக் ரோஷன் நடிக்கிறார்.

விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியின் 'அற்புதமான' நடிப்பை பார்த்தேன், 'என் கனவில் கூட' என்னால் எட்ட முடியவில்லை என இந்தியில் நடிக்கும் ஹிர்த்திக் ரோஷன் வியந்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு பின் ஹிர்த்திக் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இந்தப்படம் வர உள்ளது.

 3 ஆண்டுகளுக்கு பின் வரும் ஹிர்திக் ரோஷன்

3 ஆண்டுகளுக்கு பின் வரும் ஹிர்திக் ரோஷன்

ஹிருத்திக் ரோஷன் தனது வரவிருக்கும் விக்ரம் வேதா படத்தில், விஜய் சேதுபதி 2017 ஆம் ஆண்டு நடித்து வெளியான விக்ரம் வேதா தமிழ் படத்தின் தழுவலில் விஜய் சேதுபதியின் பாத்திரத்தில் நடிக்கிறார். ஹிர்த்திக் ரோஷன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். நாளை ரிலீஸ் ஆகும் விக்ரம் வேதா, மூன்று ஆண்டுகளுக்கு பின் அவரது முதல் படமாகும். ஹிர்த்திக் ரோஷன் நடித்து வரும் விக்ரம் வேதா திரைப்படம் பாலிவுட் உலகில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 அதே இரட்டை இயக்குநர்கள் அதே விக்ரம் வேதா

அதே இரட்டை இயக்குநர்கள் அதே விக்ரம் வேதா

விக்ரம் வேதா, ஆர்.மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த 1997 ஆம் ஆண்டு வெளியான படம். அதே பெயரில், அதே இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் இயக்கத்தில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. மேலும் டீசர் வெளியானதிலிருந்து, இரண்டு படத்தையும் ஒப்பீடு செய்வது தொடங்கி உள்ளது. விக்ரம் வேதா ரீ மேக்கில் தனது அனுபவம் குறித்து தனியார் ஆங்கில செய்தி இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு. இந்தப்படத்தில் நடித்தபோது தான் கிட்டத்தட்ட ஜென் மனநிலையில் இருந்ததாக சொல்கிறார்.

 விஜய் சேதுபதிபோல் செய்ய கனவிலும் என்னால் முடியாது-ஹிர்த்திக் ரோஷன்

விஜய் சேதுபதிபோல் செய்ய கனவிலும் என்னால் முடியாது-ஹிர்த்திக் ரோஷன்

"விஜய் சேதுபதிபோல் நடிப்பதில் என்னால் எதுவும் செய்ய முடியாது, நான் என் பங்கைச் செய்தேன். என்னால் முடிந்ததை மட்டுமே செய்வது என தீர்மானித்தேன். அது மட்டும் தான் என் கட்டுப்பாட்டில் உள்ளது. அவ்வளவுதான். நான் தினமும் சொல்லும் ஒரு பிரார்த்தனை இருக்கிறது, 'என்னால் முடிந்ததை மாற்றும் தைரியத்தையும், மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளும் மன அமைதியையும், வித்தியாசத்தை அறியும் நுண்ணறிவையும் எனக்கு கொடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

 சிவாஜியை பார்த்து மிரண்ட திலிப் குமார் போல் ஹிர்திக் ரோஷன்

சிவாஜியை பார்த்து மிரண்ட திலிப் குமார் போல் ஹிர்திக் ரோஷன்

தமிழ் விக்ரம் வேதாவில் விஜய் சேதுபதி நடித்ததை என்னால் மீண்டும் செய்ய முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் நடிக்கும் பாகத்தை விஜய் சேதுபதி எவ்வளவு அற்புதமாக செய்தார் என்பது எனக்குத் தெரியும். நான் அதுபோல் நடிப்பது என் கனவிலும் நினைக்க முடியாது. ஆனாலும், என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன். நான் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி." என்று பிரமிப்புடன் சொல்லியிருக்கிறார் ஹிர்த்திக். விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுவது இயல்பான ஒன்றுதான், ஆனால் இந்தி நடிகர்களே அஞ்சும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்துள்ளது பாராட்டத்தக்கது. ஆலயமணி படத்தை இந்தியில் எடுத்தபோது திலிப்குமார் "நான் நடிக்கிறேன் ஆனால் சிவாஜி அளவுக்கு என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்" என்றாராம். அதுபோல் ஹிர்த்திக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X