twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரிஸ்க் எடுக்க முடியாது.. கோலிவுட்டின் டாப் ஸ்டாருக்கு இந்த நிலையா? படம் வெளியாவதில் சிக்கல்!

    |

    சென்னை: கோலிவுட்டின் டாப் ஸ்டார் ஒருவரின் அடுத்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் பெரிய அளவில் அச்சப்படுவதாக கூறுகிறார்கள்.

    கோலிவுட்டில் இப்போதும் அவர்தான் டாப் ஸ்டார். இன்னும் சில வருடங்களே அவர் படங்களில் நடிக்க போகிறார் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

    அவர் இன்னும் அதிக பட்சம் 3 -2 படங்கள் நடிக்க வாய்ப்புள்ளது. அதன்பின் மொத்தமாக சினிமா துறைக்கு முழுக்கு போடுவார் என்று கூறுகிறார்கள்.

    சிங்கம்னா வேட்டையாடணும், மான்னா ஓடி ஓளியணும்...விரட்டல் மிரட்டல் கதைதான் காட்ஃபாதர்சிங்கம்னா வேட்டையாடணும், மான்னா ஓடி ஓளியணும்...விரட்டல் மிரட்டல் கதைதான் காட்ஃபாதர்

    அதற்கு முன்

    அதற்கு முன்

    சினிமா துறையை விட்டு போகும் முன் எவ்வளவு படங்களில் நடிக்க முடியுமோ அவ்வளவு படங்களில் நடிக்க அவர் முயன்று வருகிறார். இதனால் அவர் மிகவும் மோசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதாக கூறுகிறார்கள். அவர் நடித்த கடைசி இரண்டு படங்களும், மிக மோசமாக பிளாப் ஆனது.

    என்ன பிளாப்

    என்ன பிளாப்

    அதிலும் அவர் நடித்த கடைசி படம் மிக மோசமாக பிளாப் ஆகியது. படம் 300 கோடி வசூல் வரும் என்றெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையான வசூல் 100 கோடியை கூட தொடவில்லை. இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்த விநியோகஸ்தர்கள் எல்லோரும் பெரும் இழப்பை சந்தித்தனர்.

    இழப்பு

    இழப்பு

    இந்த இழப்பீட்டிற்கு ஈடு செய்ய வேண்டும் என்றும் விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் விநியோகஸ்தர்கள் வைத்த கோரிக்கையை, அந்த ஹீரோ ஏற்கவில்லை. இது பெரிய பிரச்சனை ஆனது. இதனால் தற்போது இதே ஹீரோவின் அடுத்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே ஹீரோ அடுத்த பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

    பெரிய படம்

    பெரிய படம்

    ஆனால் அவரின் அந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் அச்சப்படுவதாக கூறப்படுகிறது. கடைசியாக நீங்கள் நடித்த இரண்டு படங்களும் பிளாப். உங்களை நம்பி அடுத்த படத்திற்கு எப்படி முதலீடு செய்வது. நாங்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை என்று, விநியோகஸ்தர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

    English summary
    A famous actor's next movie gets into a lot of trouble from the distributors side.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X