போச்சு.. எல்லாம் போச்சு.. இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டானே.. உச்சகட்ட கோபத்தில் இயக்குநர்!

By Staff

சென்னை: வேறலெவல் பில்டப் செய்து வியாபாரம் செய்ய வேண்டிய நிலையில், நடிகரின் அந்த பேச்சு அத்தனைக்கும் வேட்டு வைத்துள்ளதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள் புலம்பி உள்ளனர்.

நிகழ்ச்சிக்கு போகாமல் அவர்களை தனியாக அனுப்பி தப்பு செய்து விட்டோம் என ரொம்பவே மனவருத்தம் அடைந்து விட்டாராம் இயக்குநர்.

நடிகரின் அந்த பேச்சுக்கு பிறகு ஏகப்பட்ட ட்ரோல்களும், விமர்சனங்களும் சரமாரியாக குவிந்த வண்ணமே உள்ளன.

பெரும் உழைப்பு

பெரும் உழைப்பு

சாதாரண படங்களை இயக்கவே பல இயக்குநர்கள் பெரும் உழைப்பைக் கொட்டி வரும் நிலையில், இப்படியொரு பிரம்மாண்ட படத்தை மொத்தமாகவே இப்படி அசால்ட்டாக எடுத்து வைத்திருக்கிறாரே அந்த இயக்குநர் என படத்தை வாங்க முடிவு செய்திருந்தவர்கள் எல்லாம் தற்போது யோசிக்கத் தொடங்கி விட்டார்களாம். ரொம்பவே கஷ்டப்பட்டும் மெனக்கெட்டும் பல நாட்கள் தூங்காமல் கொள்ளாமல் போராடினோம் என்று பேசினாலாவது படத்திற்கு பெரிய புரமோஷனாக மாறி இருக்கும்.

நடிகருக்கு என்ன காண்டோ

நடிகருக்கு என்ன காண்டோ

ஏற்கனவே ஒரு நடிகரை அவமானப்படுத்திய நிலையில், அவர் உங்க சகவாசமே வேண்டாம் என ஒரே அடியாக ஒதுங்கி போய் நிற்கிறார். இந்நிலையில், இந்த நடிகரை இயக்குநர் ரொம்பவே டார்ச்சர் செய்திருப்பார் போல தெரிகிறது. இயக்குநர் இல்லாத சமயமாக பார்த்து ஒரு பெரிய வெடிகுண்டாக தூக்கிப் போட்டு விட்டார். அது தற்போது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

ஏற்கனவே அந்த இயக்குநர் சமீப காலமாக உடைத்த ஃபர்னிச்சர்களால் அவர் மீது துளி கூட ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும், பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருக்கு, நல்ல கதை என்பதால், படமும் நல்லா வந்திருக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால், அதுவும் தற்போது தவிடு பொடியாகி விடுவது போல நடிகரின் பேச்சு பலரையும் பல யோசனைகளில் ஆழ்த்தி உள்ளது.

இப்பவே ரிசல்ட்

இப்பவே ரிசல்ட்

பலரும் படத்தின் ரிசல்ட்டை இப்பவே சொல்ல ஆரம்பித்து விட்ட நிலையில், வியாபார ரீதியாக பெரிய தொகைக்கு படத்தை பிசினஸ் செய்ய நினைத்திருந்தவர்களுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டதால், இயக்குநர் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார் எனக் கூறுகின்றனர். ஏற்கனவே இசையமைப்பாளர் போட்ட ஒரு வெடியே பெரிய இடியாக மாறிய நிலையில், தற்போது நடிகரின் பேச்சு நஷ்டத்தை ஏற்படுத்தி விடுமா? என்கிற பயம் எழுந்து இருப்பதாக கோடம்பாக்கம் முழுக்க பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

குறை சொல்ல ரெடியா இருக்காங்க

குறை சொல்ல ரெடியா இருக்காங்க

நல்லாவே எடுத்து வைத்தாலும், எந்த இடத்தில் ஓட்டை இருக்கும் அதை எப்படி ஓட்டலாம் என ஒரு கூட்டமே காத்துக் கிடக்கும் நிலையில், வெறும் வாய்க்கு அவல் கொடுத்த கதையாக நடிகர் சற்றுக் கூட யோசிக்காமல் பேசி விட்டதை எண்ணி இயக்குநரிடம் மன்னிப்பும் கேட்டு அவர் எஸ்கேப் ஆகி விட்டாராம். இயக்குநரை விட இந்த விஷயத்தில் தயாரிப்பு தரப்பு ரொம்பவே டென்ஷன் ஆகி இருப்பதாகவும், இந்த சிக்கலை சமாளிக்க என்ன செய்யலாம் என்பதை சிந்தித்து வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X