தொக்காக சிக்கிய அந்த பிரபல தொகுப்பாளினி.. வண்டவாளங்களை தோண்டி எடுக்கும் சூடுபட்ட பூனை!
சென்னை: நடிகைகளை பற்றிய அந்தரங்கங்களை தோண்டி எடுத்து பேசியே பிரபலமானவர் அந்த யூடியூபர். சமீப காலமாக அவருக்கு எதிராக ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சனைகளும் குவிந்த வண்ணமே உள்ளன.
சமீபத்தில் அந்த யூடியூபரை அசிங்கப்படுத்த நினைத்து பேட்டி எடுத்த அந்த பிரபல தொகுப்பாளினி தற்போது தேவையில்லாமல் புதைக் குழியில் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த தொகுப்பாளினியே ஒரு பெரிய ஃபிராடு என்றும் ஏகப்பட்ட மோசடிகளை செய்து வருபவர் என புட்டு புட்டு வைத்து விட்டாராம் அந்த அடிபட்ட பூனை.

பொழப்பே அது தான்
நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை தோண்டி எடுத்து யூடியூபில் பேசி வருவது தான் அந்த யூடியூபருக்கு பொழப்பாகவே மாறி விட்டது. தெரிந்த தகவல்கள் என்றும் செய்திகளாக வந்ததை பேசுகிறேன் என்றும் வதந்தி பரப்பவில்லை எனக் கூறி வாய்க்கு வந்தபடி பேசி பல இடங்களில் வாங்கிக் கட்டி வருகிறார்.

நடிகைகள் அந்தரங்கம்
நடிகர்களை பற்றி பேசினால் பெரிய அளவில் வீடியோவை பார்க்க யாரும் வர மாட்டார்கள், மேலும், பிரச்சனை பெரிதாகி விடும் ரசிகர்களே போட்டு பொளந்து விடுவார்கள் என்பதால் பாவப்பட்ட நடிகைகளை மட்டுமே டார்கெட் செய்து அவர்களின் அந்தரங்களை பற்றி பேசி வருகிறார் என்று அந்த யூடியூபர் பூனை ட்ரோல் செய்து வருகின்றனர்.

பாடகி பிரச்சனை
அந்த பிட்டு படங்களை வெளியிட்ட பிரச்சனையில் சமீபத்தில் அந்த பாடகிக்கும் யூடியூபருக்கும் இடையே பெரிய சண்டையே நடைபெற்றது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத அவர் பொங்கி எழுந்து வழக்கும் பதிவு செய்துள்ளார். இதுபோல பல வழக்குகள் இருந்தாலும் மனுஷன் கூலாக அடுத்த பிரச்சனையை கையில் எடுத்து டீல் செய்து வருகிறார்.

தொக்காக சிக்கிய தொகுப்பாளினி
சமூக வலைதளத்தில் வீடியோ போட்டே பிரபலமானவரை அழைத்து வந்து தொகுப்பாளினியாகவும் மாற்றி வைத்துள்ளனர். சமீபத்தில் அவர் யூடியூபரை சிக்க வைக்க நினைத்து ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளார். ஆனால், தற்போது அதெல்லாம் அவருக்கே ரிப்பீட்டு அடித்திருக்கிறது. தொகுப்பாளினியின் வண்டவாளங்களை தோண்டி எடுக்கும் முயற்சியில் அந்த யூடியூபருக்கு ஏகப்பட்ட கன்டென்ட்டுகள் கிடைத்துள்ளன.

மோசடி பேர்வழி
அந்த தொகுப்பாளினி ஒரு பெரிய மோசடி பேர்வழி என்றும் அவர் மேல் ஏகப்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், இப்ப அவர் இருப்பதே ஜாமினில் தான் என்றும் அந்த தொகுப்பாளினியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி உள்ளார். மேலும், ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட்டுகளை செய்துதான் இந்த வேலைக்கே அவர் வந்துள்ளதாகவும், மேலும், அவரைப் பற்றிய பல கன்றாவிகளை கிளறி எடுத்து வருகிறாராம் அந்த யூட்யூபர்.


Click it and Unblock the Notifications











