நடிச்சா ஹீரோயின் தான்.. இனி சின்ன ரோலுக்கெல்லாம் கூப்பிடாதீங்க.. கறாரு காட்டும் ரியாலிட்டி ஷோ நடிகை!

By Staff

சென்னை: அந்த பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ மூலம் பாப்புலரான நடிகை ஹீரோயினாக சினிமாவில் அறிமுகம் ஆவார் என பார்த்தால், வாம்மா மின்னல் என்கிற ரேஞ்சுக்கு ஒரு சின்ன ரோலில் அறிமுகமானார்.

கைவசம் ஹீரோயினாகவும் சில பல படங்களில் நடித்து வரும் அந்த ந்டிகையை தொடர்ந்து பல படங்களில் சின்ன ரோல் இருக்கு பண்றீங்களா என்றே பெரிய படங்களை இயக்கி வரும் இயக்குநர்களும் அந்த படங்களின் தயாரிப்பாளர்களும் கேட்டு வருகிறார்களாம்.

இதனால், கடுப்பான அந்த ரியாலிட்டி ஷோ அதிரடி முடிவை எடுத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சின்னத்திரை சித்திரா

சின்னத்திரை சித்திரா

சின்ன வயசுலேயே சின்னத்திரையில் நடிக்க வந்த அந்த நடிகை அந்த பெரிய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் ஹாட்டான புகைப்படங்களை பார்த்து லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டவர்கள் எல்லாம் கடைசி வரைக்கும் இவர் உள்ளே இருந்தால் கவர்ச்சி தீனி கன்ஃபார்ம் என உள்ளே ஒரு கொலு பொம்மையாகவே வைத்திருந்தனர்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வதன் நோக்கமே சினிமாவில் பெரிய ஹீரோவாகவோ ஹீரோயின் ஆகவோ ஆகிவிட வேண்டும் என்பது தான். அம்மணிக்கும் அந்த ஜாக்பாட் ஏகபோகமாக அடித்துள்ளது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபல நடிகரின் படத்திலேயே சின்ன ரோலில் நீயும் சும்மா வந்துட்டு போம்மா என்றதும் நடிக்க சான்ஸ் கிடைச்சிடுச்சு என சந்தோஷத்தில் பூரித்துப் போனார் அந்த நடிகை.

வாம்மா மின்னல்

வாம்மா மின்னல்

நானும் வேர்ல்ட் நடிகர் படத்தில் நடிக்கிறேன் என சோஷியல் மீடியாவில் பந்தா பண்ணி வந்த அந்த நடிகையை தியேட்டரில் போய் பார்த்ததும், வாம்மா மின்னல் மாதிரி வந்து போனதை பார்த்து நெட்டிசன்கள் பயங்கரமாக ஓட்டி வருகின்றனர். இந்நிலையில், விரைவில் வரப் போகும் இன்னொரு படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கிறார் அந்த நடிகை.

சைடு ரோலில்

சைடு ரோலில்

சைடு ரோலில் இந்த நடிகை சும்மா நச்சுன்னு இருக்காரே.. இவரை, நம்ம படத்திலும் ஒரு சைடு ரோலில் புக் பண்ணா என்ன என ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் படையெடுத்து வருகிறார்களாம். ஹீரோயினாக கலக்க வேண்டும் என்கிற தனது கனவெல்லாம் இப்படியே நடிச்சா வீணாய் போயிடுமே என நினைத்த அந்த நடிகை அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.

அந்த டீலிங் ஓகேனா

அந்த டீலிங் ஓகேனா

சின்ன ரோலில் நடிக்க மாட்டேன்னு சொல்லவில்லை. அப்படி அதிக பிரசங்கி தனமாக பேசினால் இண்டஸ்ட்ரியிலேயே இருக்க முடியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால், ஒரு படத்தில் சின்ன ரோலில் நடித்தால், அதே பேனரில் உருவாகும் இன்னொரு படத்தில் ஹீரோயின் ரோல் கொடுக்க வேண்டும் என புத்திசாலித்தனமாக நடிச்சா ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்பதை சொல்லி இருக்கிறார்.

ஆரம்பமே இப்படியா

ஆரம்பமே இப்படியா

இந்த முடிவு அவருக்கு சாதகமாக முடியுமா? அல்லது பாதகமாக முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முன்னணி நடிகர்களே மூணு நிமிஷம் ரோல் கிடைத்தாலும் போதும் என நடித்து வரும் சூழலில் இந்த ரியாலிட்டி ஷோ நடிகை ஆரம்பத்திலேயே இப்படி அட்ராசிட்டி பண்ணுகிறாரே என சிலர் அதிருப்தியையும் காட்டத் தொடங்கி விட்டனர் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X