அந்த டாப் நடிகரால் எனக்கு வாழ்க்கையே போச்சு...கண்ணீர் விட்டு புலம்பிய பெருமாள் நடிகர்

By Staff

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா வட்டாரத்தில் படங்களில் மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளையும், தோல்விகளையும் சந்தித்து வருகிறார் பெருமாள் நடிகர். ஒரு வழியாக இப்போது தான் பிரச்சனைகளில் இருந்து மீண்டு, அவர் பக்கமும் அதிர்ஷ்ட காற்று அடிக்க துவங்கி உள்ளது.

Gossip...Young hero blames that top hero spoil his life

நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. இதில் தான் சந்தித்த அவமானங்கள் ஏமாற்றங்கள் பற்றி அனைவரிடமும் ஓப்பனாக சொல்லி கண்ணீர் விட்டு அழுது புலம்பி உள்ளாராம்.

அதிலும் குறிப்பாக தான் அறிமுகப்படுத்தி வெற்றி இயக்குனராக மாறிய சிலர் தனக்கே எமனாக அமைவதுதான் கவலையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் வேறு யாரையும் சொல்லவில்லை. எம்ஜிஆர் பட டைட்டிலில் தான் நடித்த சையின்ஸ் படத்தை எடுத்த சூரிய இயக்குனரை தான் அப்படி சொல்லி இருக்கிறார் பெருமாள் நடிகர்.

இதை கேட்டு ஷாக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். சூரிய இயக்குனர் அப்படி என்ன செய்தார் என புரியாமல் இருந்துள்ளனர். தனியாக அவருக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் விசாரித்த போது நடந்த முழு கதையும் தெரிய வந்தது. இதை கேள்விப்பட்டவர்கள், அட பாவமே இவர் நிலைக்கு இது தான் காரணமா என பரிதாபப்பட்டு செல்கிறார்கள்.

வழக்கமாக வந்த கமர்ஷியல் சினிமாவில் வித்தியாசமான கதையை கொடுத்து சூப்பர் ஹிட் படமாக மாறியது தான் எம்ஜிஆர் பட டைட்டிலில் வந்த அந்த படம். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்த உடன் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உடனடியாக தொடங்க பெருமாள் நடிகர் ஆசைப்பட்டார். அதற்கான கதையையும் திரைக்கதையையும் சூரிய இயக்குனரும் ஏற்கனவே முடித்து வைத்து விட்டாராம்.

தொடர்ந்து இதே மாதிரி வெற்றிப் படங்களைக் கொடுத்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட் நிலையாக இருக்கும் என்பதை நம்பி அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க ஆசையாக இருந்தாராம் பெருமாள் நடிகர். ஷுட்டிங் உள்ளிட்ட விஷயங்களைக் கூட பேசி முடித்து வைத்திருந்தார்களாம். அந்த படம் வந்தால் தனக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் வரும். தானும் வெற்றி நாயகனாக மாறலாம் என மிக ஆசையாக இருந்தாராம் பெருமாள் நடிகர்.

ஆனால் இடையில் புகுந்த அந்த டாப் ஈசன் நடிகர் தனக்கு ஒரு படம் செய்து கொடுக்கும்படி சூரிய டைரக்டரிடம் கேட்டாராம். ஈசன் நடிகர் டாப் ஹீரோக்களில் ஒருவராக மாறி வருகிறார் அதனால் சம்பளமும் அதிகம் கிடைக்கும். அதேசமயம் அவருடன் படம் செய்தால் நம்ம பெரிய இயக்குனர் ஆகிவிடலாம் என்ற நினைப்பில் எம்ஜிஆர் பட டைட்டில் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலையை வேறு ஒருவரின் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இதை சொல்லி மனம் நொந்து போய் பேசிய பெருமாள் நடிகர், நான் இப்போதும் சொல்கிறேன். என்னுடன் பணியாற்றுபவர்கள் பெரிய இயக்குனர்கள் ஆக வளர்ந்தால் எனக்கு சந்தோசம் தான். அதே நேரத்தில் உங்களுக்கு பட வாய்ப்பு கொடுத்த என்னுடன் தொடர்ந்து படங்கள் செய்தால் தான் நானும் பெரிய நடிகராக வலம் வர முடியும் என்ற ஆதங்கத்தை முன்வைத்து கண்ணீர் வடித்துள்ளார் பெருமாள் நடிகர்.

பெருமாள் நடிகரின் இந்த ஓப்பன் பேச்சால், தற்போது இவரது வளர்ச்சி மற்றும் வாழ்க்கையை கெடுத்தது அந்த சூரிய இயக்குனரா இல்லை, ஈசன் நடிகரா என தெரியாமல் அனைவரும் குழம்பிப் போய் உள்ளனர். ஆனால் ஈசன் நடிகரின் பங்கும் இதில் இருப்பதால், பெருமாள் நடிகருக்கு ஈசன் நடிகர் மீதும் வருத்தம் உள்ளதாம். அதையும் அவர் மறைமுகமாக சொல்லி புலம்பி உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X