நானும் சம்பளத்தை ஏத்துறேன்.. பிரம்மாண்ட படத்துக்கு பிறகு வாரிசு நடிகர் பண்ணும் அலம்பல் தாங்கலையாம்!

By Staff

சென்னை: சினிமாவில் நடிப்புக்கு பெயர் போன குடும்பத்தில் இருந்து வாரிசு நடிகராக வந்த அந்த இளம் நடிகர் இஷ்டத்துக்கு தனது சம்பளத்தை அதிகரித்துள்ளது தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம்.

நேற்று வந்த நடிகர் எல்லாம் 10 கோடி 20 கோடி வாங்குறான், எனக்கு மட்டும் அதே பழைய சம்பளமா என திடீரென இஷ்டத்துக்கு தனது சம்பளத்தை ஏற்றியுள்ளராம்.

எல்லாம் அந்த பிரம்மாண்ட படத்தில் நடித்ததற்கு பிறகு அவருக்குள் நேர்ந்த மாற்றம் தான் என்கின்றனர்.

அனந்தமான அறிமுகம்

அனந்தமான அறிமுகம்

பெரிய இடத்து பிள்ளை என்பதால் முதல் படமே சிறப்பாக இருக்க வேண்டும் என மாஸ் என்ட்ரி அவருக்கு கொடுக்கப்பட்டது. முதல் படத்திற்காக முடிந்தவரை கஷ்டப்பட்டு சிறப்பான நடிப்பை கொடுத்து வெற்றிப்படமாக அந்த நடிகரும் மாற்றினார். முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகையுடன் வெகுவாக கிசுகிசுக்கப்பட்டு வந்தார் அந்த நடிகர்.

அத்தனையும் சொதப்பல்

அத்தனையும் சொதப்பல்

அந்த படத்திற்கு பிறகு அந்த வாரிசு நடிகர் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்தன. முதல் படமே இன்னொரு வாரிசு நடிகர் பண்ண வேண்டியது. ஆனால், கடைசி நேரத்தில் கட்ட பஞ்சாயத்து பண்ணி இவர் பிடுங்கிக் கொண்டார் என பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் எல்லாம் வைக்கப்பட்டன.

ஃபீல்ட் அவுட்

ஃபீல்ட் அவுட்

அதன் பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாம் சொதப்பிய நிலையில், நடிகர் கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட் ஆகி இருந்தார். அந்த நேரத்தில் தான் காக்கிச் சட்டை அவருக்கு நல்லாவே கை கொடுத்தது. இயல்பான நடிப்பால் நல்ல நடிகர் என்கிற பெயரை எடுத்த வாரிசு நடிகர் படம் தியேட்டருக்கு வந்தால் ஓடாதோ என்கிற பயத்தால் ஓடிடியில் ரிலீஸ் செய்து பெரிய தப்பு செய்து விட்டார்.

பிரம்மாண்ட படம்

பிரம்மாண்ட படம்

அடுத்ததாக அவரது அப்பா தயவில் அப்பாவுடன் இணைந்தே அந்த பெரிய இயக்குநர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், அந்த படத்தில் நடித்த சக நடிகர்களின் சம்பளத்துக்கும் தனது சம்பளத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பார்த்து மனுஷன் ரொம்பவே ஷாக் ஆகி உள்ளார்.

சம்பளத்தை ஏத்திட்டாரு

சம்பளத்தை ஏத்திட்டாரு

கைவசம் பெரிய படங்களே இல்லாத நிலையில், இதற்கு மேல் தான் நடிக்கப் போகும் படங்களுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என 30 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்த அந்த நடிகர் அதிரடியாக சம்பளத்தை ஏற்றியது அவரை வைத்து சிறு பட்ஜெட்டில் படம் எடுக்கலாம் என நினைத்த தயாரிப்பாளர்களுக்கு பேரிடியாக மாறி உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X