»   »  சம்பளம் பெருசில்ல... "சக்சஸ்" தான் முக்கியம்... இறங்கி வந்த ஹீரோ!

சம்பளம் பெருசில்ல... "சக்சஸ்" தான் முக்கியம்... இறங்கி வந்த ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து தனது படங்கள் சொல்லிக் கொள்வது போல் போகாததால், நல்லதொரு வெற்றிப் படத்திற்காகக் காத்திருக்கிறார் "பிக்கப் டிராப்" நடிகர்.

திரைக்கு வெளியேயும் நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவிலும் இந்த நடிகருக்கு மிகவும் நல்ல பெயரே உள்ளது. தயாரிப்பாளருக்கு கஷ்டமென்றாலும், நஷ்டமென்றாலும் தன் சம்பளத்தில் பெரும் பகுதியை விட்டுக் கொடுப்பவர் இந்த நடிகர்.

ஆனால், தொடர்ந்து இவரது படங்கள் சொல்லிக் கொள்வது போல் போகவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "டாஸ்மாக்" படமும் ஊற்றிக் கொண்டதில் நடிகருக்கு ரொம்பவே கவலையாம். இதனால் புதிய படங்களுக்கான கதையை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறாராம்.

இந்நிலையில் "ஒன் மேன்" படத்தை தயாரித்த கம்பெனி, இந்த நடிகரை வைத்து படமெடுக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. முதலில் சம்பளமாக ரூ. 5 கோடி கேட்டாராம் நடிகர்.

ஆனால், உங்க படம்தான் தொடர்ந்து சரியா போகல. நீங்க தயாரிச்சு நடிச்ச படமும் போகல. அதனால இது தான் உங்களது தற்போதைய நிலைமை என தயாரிப்பு எடுத்துக் கூறியதாம்.

அதைக் கேட்டு சுதாரித்துக் கொண்ட நடிகர், ‘சம்பளம் ஒரு பொருட்டல்ல, எனக்கு உடனடியாக ஒரு சக்சஸ் வேணும்' என இறங்கி வந்திருக்கிறாராம்.

English summary
The pick up drop actor has reduced his salary, because of his continues flops.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil