பிரேக் அப் நிலைக்கு வந்த நம்பர் நடிகையின் காதல்... திடீர் திருமண ஏற்பாட்டிற்கு இது தான் காரணமா?

சென்னை : நம்பர் நடிகையின் பிடிவாதத்தால் சொந்த படத்திற்கே பிரச்சனை வரும் நிலை ஏற்பட்டுள்ளதால், நம்பர் நடிகை மீது செம கோபத்தில் இருக்கிறாராம் டைரக்டர். ஆனால் அவரிடம் அதை காட்ட முடியாது என்பதால் அடக்கி வாசித்து வருகிறாராம்.

தான் நடிக்கும் எந்த படத்தின் ப்ரொமோஷனிலும் கலந்து கொள்வதில்லை என்பதை பல வருட கொள்கையாகவே கடைபிடித்து வருகிறார் நம்பர் நடிகை. இது பற்றி பலரும் விளக்கம் கேட்டதற்கு கூட, அது தனது சென்டிமென்ட் என சொல்லி நழுவி விட்டார். நடிப்பதோடு சரி, ப்ரொமோஷன், அது பற்றி பேட்டி எல்லாம் என்னிடம் கேட்க கூடாது பலரிடம் கறாராக கூட சொல்லி உள்ளாராம்.

டைரக்டருக்கு வந்த ஆப்பு

டைரக்டருக்கு வந்த ஆப்பு

ஆனால் இந்த பல வருட கொள்கை தான் தற்போது டைரக்டருக்கு வினையாகி உள்ளது. தங்கள் சொந்த தயாரிப்பு என்பதால் ப்ரொமோஷனுக்கு வர சொல்லி கேட்டுள்ளார் டைரக்டர். ஆனால் நம்பர் நடிகையோ, என்னை பற்றி தெரிந்தும் இப்படி கேட்கிறாயே என கேட்டு விட்டாராம். அவர் ஒரு முடிவு எடுத்தால் அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டார் என நம்பர் நடிகை பற்றி தெரிந்த டைரக்டரும் முதலில் சாதாரணமாக விட்டு விட்டாராம்.

ஹீரோவுடன் மோதலா

ஹீரோவுடன் மோதலா

நம்பர் நடிகை மட்டுமல்ல, டைரக்டருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஹீரோவும் ப்ரொமோஷனுக்கு வர மறுத்து விட்டாராம். இது தெரிந்த மற்றொரு ஹீரோயினும், அவர்களே வரவில்லை. நான் எதற்காக வர வேண்டும் என மறுத்து விட்டாராம். ப்ரொமோஷனுக்கு யாரும் வரவில்லை என்ற செய்தி வெளியில் கசிந்து விட்டதால் வேறு இல்லாமல் டைரக்டரும் சண்டை போட்டு முறைத்துக் கொண்டிருந்த ஹீரோவிடமே கெஞ்சி, மோதல் ஏதும் இல்லை என்பதை காட்ட டிவிக்களுக்கு பேட்டி அளிக்கவாவது வாங்க என கூட்டி வந்திருக்கிறாராம்.

அச்சச்சோ உளறிட்டாரே

அச்சச்சோ உளறிட்டாரே

பேட்டியின் போது, நம்பர் நடிகை எடுப்பது தான் முடிவு. தான் ஒன்றுமே பேச முடியாது என்பதை வாய் தவறி உளறி விட்டு, பின்பு சுதாரித்துக் கொண்டு, வேறு விதமாக சொல்லி சமாளித்தார். ஆனால் நம்பர் நடிகை மீது டைரக்டருக்கு உள்ளுக்குள் கோபம் இருக்கத்தான் செய்கிறதாம். டைரக்டருக்கு மட்டுமல்ல, நம்பர் நடிகையும் டைரக்டர் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறாராம். கிட்டதட்ட லவ் பிரேக் அப் செய்யும் நிலைக்கே போய் விட்டாராம்.

பிரேக் அப் நிலைக்கு போன நம்பர் நடிகை

பிரேக் அப் நிலைக்கு போன நம்பர் நடிகை

அதற்கு காரணம், அந்த காதல் படத்தின் பார்ட்டியின் போது, சமத்து ஹீரோயினுடன் டைரக்டர் சிரித்து சிரித்து பேசி, ரொம்ப நெருக்கமாக நடந்து கொண்டாராம். இதனை கவனித்த நம்பர் நடிகை பார்ட்டியில் பெரிதாக வெளிகாட்டிக் கொள்ளாமல், தனியாக கூப்பிட்டு டைரக்டருக்கு செம டோஸ் விட்டாராம். இதை வைத்து இருவருக்கும் இடையே பெரிய சண்டையே நடந்துள்ளது. பிரேக் அப் நிலைக்கு போனதால் பதறிப் போன டைரக்டர், மன்னிப்புக் கேட்டு நம்பர் நடிகையை கூல் செய்துள்ளார்.

கல்யாண ஏற்பாட்டிற்கு இதுதான் காரணமா

கல்யாண ஏற்பாட்டிற்கு இதுதான் காரணமா

ஓவராக கன்டிஷன் போடுவது, பிடிவாதமாக டாமினேஷன் செய்வது, குறிப்பாக ப்ரொமோஷனுக்கு கூட வர மாட்டேன் என சொல்வது போன்ற பல காரணங்களால் நம்பர் நடிகை மீது கொஞ்சம் கோபம் இருந்தாலும், அவர் மீதான லவ் காரணமாக அனைத்தையும் பொறுத்து போகிறாராம் டைரக்டர். ஆனால் நம்பர் நடிகையோ பிரேக் அப் வரை வந்து விட்டதால், மேற்கொண்டு எந்த விபரீத முடிவையும் நம்பர் நடிகை எடுத்து விடாமல் இருக்க சட்டுப்புட்டுன்னு கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாராம் டைரக்டர். நம்பர் நடிகையை வைத்து தான் பல பெரிய பட வாய்ப்புக்கள் டைரக்டருக்கு வருகிறதாம். இந்த சமயத்தில் நம்பர் நடிகையுடன் மோதல், பிரிவு என வெளியில் விஷயம் லீக் ஆனால் பிழைப்புக்கே பிரச்சனை வந்து விடும் என பயத்தில் இருக்கிறாராம் டைரக்டர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X