சொல்ல தயங்கிய இயக்குநர்.. புரிந்து கொண்ட டாப் நடிகர்.. இப்படியொரு முடிவெடுக்க அதுதான் காரணமா?
சென்னை: முந்தைய படத்திலேயே மிகவும் இளமையான கேரக்டர் என சொன்ன நிலையில், டாப் நடிகர் ரொம்பவே சிரமப்பட்டு உடல் எடையை சற்றே குறைத்தார்.
ஆனால், இயக்குநர் எதிர்பார்த்த அளவுக்கு அவரது தோற்றம் இல்லை என்றாலும், வேறு வழியில்லாமல் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார்.
இந்நிலையில், அடுத்த படத்தில் எப்படியாவது தனக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என இயக்குநர் நினைத்தாலும், அதை டாப் நடிகரிடம் எப்படி சொல்வது என தெரியாமல் தயங்கி வந்த நிலையில், நடிகரே அதை புரிந்து கொண்டாராம்.

எப்படியும் ஹிட்
டாப் நடிகருக்கு இருக்கும் ஃபேஸ் வேல்யூவுக்கு அவரது படம் எப்படி இருந்தாலும் அது ஹிட் ஆகிவிடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதன் காரணமாகத்தான் எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் தயாரிப்பாளர்கள் தயங்காமல் கூடுதலாகவே கொடுக்க சம்மதித்து வருகிறார்கள்.

லாபம் உண்டு
எப்படியும் போட்ட பணத்திற்கு மேல் லாபத்தை பார்த்து விடலாம் என நினைப்பதால் தான் இப்படி காசை இரைத்து வருகின்றனர். நடிகரின் படமும் ஓரளவுக்கு இருந்தாலே ரசிகர்களின் பலத்தால் நல்லாவே ஓடி கல்லா கட்டி விடுகிறது. ஆனால், விமர்சன ரீதியாக பெரும் அடி வாங்கி வரும் டாப் நடிகர் அந்த பேச்சையும் மாற்ற வேண்டும் என்கிற முடிவுடன் உள்ளாராம்.

இயக்குநருக்கு பிடிக்கல
கடந்த இரு படங்களையும் அந்த இயக்குநர் முழு மனதுடனே இயக்கவில்லை என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தன்னை சுதந்திரமாக படம் இயக்க விடவில்லை என்றும் கட்டாயப்படுத்தி சில காட்சிகளை திணித்தனர் என்றும் ஹீரோவின் தோற்றம் உள்ளிட்ட ஒரு சில விஷயங்கள் தான் க்ரியேட் செய்த கதாபாத்திரத்திற்கு ஒட்டவே இல்லை என புலம்பித் தள்ளி உள்ளார்.

புரிந்து கொண்ட டாப் நடிகர்
இயக்குநர் எதிர்பார்ப்பதை செய்வது தான் நம் கடமை என்பதை டாப் நடிகர் புரிந்து கொண்டாராம். நமக்குப் பிடித்ததை போல செய்த இயக்குநருக்கு பிடித்ததை போல நாம் நடித்துக் கொடுக்க வேண்டும் என திடீரென உடல் எடையை கணிசமாக குறைக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளாராம்.

விரல் நடிகர் செய்ததை போல
அதிக எடையுடன் விமர்சங்களுக்கும் கிண்டலுக்கும் ஆளான விரல் நடிகர் எப்படி பக்கத்து ஸ்டேட்டுக்கு சென்று தீவிர ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் உடல் எடையை குறைத்தாரோ, அதே போல தானும் உடல் எடையை கணிசமாக குறைக்கும் முயற்சியில் டாப் நடிகர் இறங்கி உள்ளார் என கோடம்பாக்கம் முழுக்க ஒரே பேச்சாக பேசப்பட்டு வருகிறது.

ரியல் வேறமாறி
சும்மா பேச்சுக்காக இல்லாமல், நிஜமாகவே வேறமாறி படமாக அடுத்த படம் உருவாகப் போவதை உணர்ந்து கொண்ட டாப் நடிகர் தன்னுடைய 100 சதவீத முயற்சியை உடலில் உள்ள அத்தனை காயங்களையும் பொருட்படுத்தாமல் செய்ய முடிவு செய்திருப்பதை அறிந்த இயக்குநர் மெய் சிலிர்த்து போய்விட்டாராம். தன்னுடைய பங்குக்கு படத்தை தரமாக கொடுக்கும் முயற்சிகளில் அவரும் மும்முரம் காட்டி வருகிறாராம். சீக்கிரமே ஒரு தரமான சம்பவம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











