»   »  ஜக்குபாயில் ஜோதிகா

ஜக்குபாயில் ஜோதிகா

Subscribe to Oneindia Tamil


ஜோதிகாவுக்கு தமிழத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் விதித்துள்ள தடையைையும் மீறி தனது ஜக்குபாய் படத்தில் அரைை ரஜினி ஹீரோயினார புக் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாபா மற்றும் மக்களவைத் தேர்தலில் எடுத்த அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்பட்ட படுதோல்விகளுக்குப் பிறகு ரஜினி நடிக்கவுள்ள படம் ஜக்குபாய்.

கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்கவுள்ளார். மக்களவைத் தேர்தல் எதிரொலியால், அலை ஓயட்டும் என்று ஜக்குபாயை கொஞ்ச நாட்களுக்கு கிடப்பில் போட்ட ரஜினி, மீண்டும் பட வேலைகளை ஆரம்பித்துள்ளார். ஆனால், இதில் பெரும் ரகசியம் காக்கப்படுகிறது.

இந்தப் படத்துக்காக தனது உதட்டில் இருந்த வெள்ளைப் படலத்தை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்துள்ள ரஜினி, தனது ஹீரோயினை தேர்வு செய்யும் வேலையை முடித்துள்ளார்.

ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ரஜினி தரப்பில் பெரும் முயற்சிகள் நடந்தன. ஆனால், அவரது கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் ஆகி வருவதால், ஜோதிகாவை ஹீரோயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஜோதிகாவை அலர்ட் செய்துள்ளனராம். அவரும் ஓ.கே. சொல்லிவிட்டு ஜக்குபாய்க்காக கால்ஷீட்டை ஒதுக்கி வைத்துவிட்டார் என்கிறார்கள்.

அர்ஜூனுடன் புக் ஆன ஒரு படத்தில் நடிக்க மறுத்ததற்காக தயாரிப்பாளர் சங்கம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ட் போட்டுள்ளது. அதாவது புதுப் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளும் முன் தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஜோதிகாவை புக் செய்யும் நிறுவனங்களும் அதை தயாரிப்பாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்


இந்த பிரச்சினை காரணமாகத்தான் கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட வாய்ப்பை ஜோதிகா நழுவவிட்டார்.

இந் நிலையில் ரஜினியின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள ஜோதிகா அதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் முன் அனுமதியைப் பெறவில்லை. மேலும் ரஜினி தரப்பில் இருந்தும் தயாரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் புதுப் பிரச்சினை உருவாகும் என பேச்சு அடிபடுகிறது.

ஜோதிகாவுக்கு ரெட் கார்டு போடப்பட்டபோது அவர் கடுமையான டைபாய்ட் ஜூரத்தில் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது மும்பையில் இருந்த ஜோதிகா, அங்கிருந்தபடியே தயாரிப்பாளர் சங்கப் பிரமுகர்களைத் தொடர்பு கொண்டு தடையை நீக்குமாறு கெஞ்சி வந்தார். ஆனால், நினைத்தது நடக்கவில்லை.

இதனால் உடல் நலம் தேறியதும் சென்னை வருவதைத் தவிர்த்துவிட்டு தெலுங்குப் பக்கமாய் சான்ஸ் தேட ஆரம்பித்தார். அப்படி சில வாய்ப்புக்களும் கிடைத்த நிலையில் தான் ஜாக்குபாய் சான்ஸ் வந்துள்ளது.

உடனே தனது தெலுங்கு புரோக்ராம்களை மாற்றிக் கொண்டு ஜக்குபாய்க்கு எப்போது வேண்டுமானாலும் நடிக்கத் தகுந்த வகையில் கால்ஷீட்டை அமைத்துக் கொண்டுள்ளாராம்.

கொசுறு: இன்றைய தேதிக்கு, ஒரு படத்துக்கு ஜோதிகா வாங்கும் சம்பளம் இன்றைய தேதிப்படி ரூ. 40 லட்சம் !!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil