டாப் நடிகரை பாசத்தால் கவிழ்த்த காதல் இயக்குநர்.. ஆனால், அந்த ஒரு சிக்கல் இருக்கே?
சென்னை: இயக்குநருடன் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனால், தான் அந்த டாப் நடிகர் தொடர்ந்து அவருடன் டிராவல் செய்வார் என்பது கோலிவுட்டில் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
டாப் நடிகரின் சமீபத்திய ரிலீஸ் படத்தில் பாச பாடலை எழுதி கவர் செய்த காதல் இயக்குநர் அடுத்ததாக அந்த நடிகரை இயக்கவும் ரெடியாகி விட்டார்.
தற்போது பயணித்து வரும் இயக்குநரின் மூன்றாவது படத்தையும் முடித்து விட்டு காதல் இயக்குநருடன் கைகோர்க்க காத்திருக்கிறாராம் டாப் நடிகர்.

அன்பு தான் முக்கியம்
டாப் நடிகரை பொறுத்தவரையில் அன்பும் மரியாதையும் தான் முக்கியமாம். கதை, திரைக்கதை எல்லாமே இரண்டாம் பட்சம் தான். எந்தவொரு இயக்குநருடன் அவருக்கு மனதளவில் அன்பும் பாசமும் இயல்பாக ஏற்படுகிறதோ அவருடன் இணைந்து பணியாற்ற தயங்கவே மாட்டாராம். படத்தின் வெற்றி, தோல்வியை கூட டாப் நடிகர் கருத்தில் கொள்ள மாட்டார்.

பாசத்தால் கவிழ்த்த இயக்குநர்
இதையறிந்த கொண்ட அந்த காதல் இயக்குநர் நடிகரின் படத்தில் காதல் பாடல்கள் எழுதாமல் பாசப் பாடலை எழுதி அவரது இதயத்தில் இடம் பிடித்து விட்டாராம். இப்படி செய்து தான் ஏற்கனவே ஒருவர் மனதிலும் அந்த இயக்குநர் இடம்பிடித்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். காதல் இயக்குநர் எழுதிய பாடலால் உருகிப் போன டாப் நடிகர், அடுத்து நாம சேர்ந்து படம் பண்ணுவோம் கதை ரெடி பண்ணுங்க என அன்புக் கட்டளை போட்டதும், ஏற்கனவே ரெடியா வச்சிருக்கேன் சார் என ஒரு கதையை சொல்ல டாப் நடிகர் கவிழ்ந்து விட்டாராம்.

காதலியே நடிகை
ஏற்கனவே டாப் நடிகருக்கும் நம்பர் நடிகைக்கும் இடையே செம கெமிஸ்ட்ரி பல படங்களில் வொர்க்கவுட் ஆகி வந்த நிலையில், காதலர் இயக்கும் படத்தில் காதலியே நாயகியாகவும் மாறி விட்டாராம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல காதல் இயக்குநர் உச்சகட்ட சந்தோஷத்தில் குதித்து வருகிறாராம்.

அந்த சிக்கல் இருக்கே
காதல் இயக்குநர் இதுவரை இயக்கிய படங்களிலேயே ஒரு படம் மட்டும் தான் நல்லா ஓடியது. பிரைட் நடிகரை வைத்து அவர் இயக்கிய கும்பல் படம் படுதோல்வியை சந்தித்த பிறகு புதிதாக படத்தை இயக்கவே பல காலத்தை எடுத்துக் கொண்டார் அந்த இயக்குநர். இந்நிலையில், டாப் நடிகரின் படம் எப்படி இருக்குமோ என்கிற கேள்வி இயல்பாகவே அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

அது ஹிட் ஆனால்
காதல் இயக்குநர் இயக்கத்தில் நம்பர் நடிகை நடித்துள்ள படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்று விட்டால் எல்லாமே 100 சதவீதம் உறுதியாகி விடும் என்கின்றனர். மேலும், படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறும், ஆனால், அந்த நடிகரின் படங்கள் தொடர்ந்து சொதப்பி வருவது போல இந்த படமும் காலை வாரி விட்டால் மொத்தமும் மோசமாகிவிடும் என்கிற பயத்திலும் அந்த இயக்குநர் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என கோயில் கோயிலாக வேண்டி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











