»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் சில டைரக்டர்கள் மீது மந்த்ரா பயங்கர கடுப்பில் இருக்கிறார்.

சமீபத்தில் அவரைப் பார்க்க வந்த ஒரு டைரக்டர் கதையெல்லாம் சொன்னாராம். மனம் லயிக்கஅதைக் கேட்ட மந்த்ரா, இதில் எனக்கு என்ன ரோல் என்று கேட்க ஹீரோயினுக்கு அக்கா என்றாராம்.கடுப்பான மந்த்ரா அவரைத் திட்டி விரட்டியிருக்கிறார்.

அதே போல சூட்டிங் ஸ்பாட்டில் அவரைச் சந்தித்த ஒரு டைரக்டர் தனியே தள்ளிக் கொண்டுபோனார் (பேசுவதற்காககத் தான்!!). என் படத்தில் ஹீரோவுக்கு அண்ணி வேடத்தில் நடிக்க வர்றீங்களா. பணம்பிரச்சனை இல்லை என்றாராம். அவரை ஸ்பாட்டில் வைத்தே திட்டினாராம் மந்த்ரா.

இப்போதெல்லாம் யாராவது கால்ஷீட் கேட்டு போன் செய்தாலே முதலில் என்ன ரோல் என்று கேட்டுவிட்டுத் தான்பேசவே ஆரம்பிக்கிறாராம்.

இது எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம் என்கின்றனர் சூடு பட்டுத் திரும்பிய டைரக்டர்கள். தெலுங்கில்மார்க்கெட் படுத்துவிட்டதால் துக்கடா ரோல்கள், ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் மந்த்ரா விரைவிலேயே அக்காவேஷத்தையும் ஒப்புக் கொள்வார் என்கிறார்கள் இந்த சூடு கண்ட பூனைகள்.

டப்பிங் கொடுக்கிறார் ரதி!

ரதி நடிகை என்று மட்டும் தெரிந்தவர்களுக்கு இந்த செய்தி!

நடிப்பதோடு டப்பிங் கொடுக்கவும செய்கிறார் ரதி. நல்ல குரல் வளம் இருப்பதோடு, தமிழ்படிக்கவும், வாசிக்கவும் தெரியும் என்பதால் ஏகப்பட்ட டப்பிங் வாய்ப்புகளும் ரதிக்கு வந்துகொண்டுள்ளன.

அவற்றை தட்டிக் கழிக்காமல் ஒத்துக் கொண்டு விடுகிறாராம் ரதி.

டப்பிங் உலகில் முன்னணியில் திகழும் சவீதாவின் (சிம்ரன், ஜோதிகாவுக்கு இவர்தான் குரல் தானம்செய்கிறார்) குரல் போலவே தனது குரலும் இருப்பதாக கருதும் ரதி முன்னணி நடிகைகளுக்கும் குரல்கொடுக்கத் தயார் என்கிறாராம்.

இதன் மூலமே லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து விடுகிறார். நடிப்பில் பிஸியாக இருந்தால்இரவிலும் கூட டப்பிங் தியேட்டரில் ஆஜராகிவிடுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil