அண்ணா.. அண்ணான்னு சொல்லி ஆப்பு அடிச்சிட்டாரு.. அந்த வாரிசு மீது கோபத்தில் மாஸ் நடிகர்?

By Staff

சென்னை: மாஸ் நடிகர் மற்றும் டாப் நடிகருக்கு இடையே போட்டியை உருவாக்கி விட்டதே அந்த பிரபல வாரிசு தான் என பரபரப்பான பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

மாஸ் நடிகரின் படத்தின் ரிலீஸ் தேதி எல்லாம் முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், டாப் நடிகரின் படத்தை வாங்கிய அந்த பிரபல வாரிசு மாஸ் நடிகருடன் மல்லுக்கட்டலாம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துள்ளார் எனக் கூறுகின்றனர்.

மாஸ் நடிகரின் படத்தின் ரிலீஸே தற்போது அந்த வாரிசு பண்ண செயலால் தள்ளிப் போகும் நிலை உருவாகி உள்ளதாக கடும் கோபத்தில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

மோதி பார்க்கும் மாஸ் நடிகர்

மோதி பார்க்கும் மாஸ் நடிகர்

பக்கத்து ஸ்டேட் பெரிய படங்கள் வந்தாலே பின் வாங்காமல் ஒரு கை பார்த்து விடுவார் அந்த மாஸ் நடிகர். ஆனால், தற்போது டாப் நடிகருடனான போட்டியில் இருந்து பின் வாங்கப் போகிறார் என்கிற பரபரப்பான கருத்துக்கள் பரவி ரசிகர்களை கடுங்கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. பழசை எல்லாம் மறந்துட்டாரே அந்த வாரிசு என ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.

போட்டி வேண்டாம்

போட்டி வேண்டாம்

வழக்கம் போல இந்த முறையும் போட்ட் வேண்டாமே நாம பொறுமையா ரிலீஸ் பண்ணிக்கலாமே என டாப் நடிகர் சொல்லியும் அந்த பிரபல வாரிசு பண்ண வேலை தான் இந்த போட்டி வர காரணமே என புது பூகம்பம் கோடம்பாகத்தில் வெடித்து இருக்கிறது. ஏற்கனவே உச்ச நடிகரையும் பாஸ் நடிகரையும் மோத விட்டு வேடிக்கை பார்த்து வருவதும் அந்த பிரபல வாரிசு தான் என்கின்றனர்.

கோலிவுட்டே பாக்கெட்டில்

கோலிவுட்டே பாக்கெட்டில்

அந்த பிரபலத்தின் பாக்கெட்டில் தான் கோலிவுட்டே தற்போது இயங்கி வருகிறது என்று பலரும் புலம்பி வருகின்றனர். சிலர், சிண்டிகேட்டிடம் இருந்து எப்படி தப்பிப்பதே தெரியவில்லை என புலம்பியபடி ட்வீட்களை போட்டு வருவதையும் காண முடிகிறது. இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு வேறு விதமாக பதிலடி தர மாஸ் நடிகர் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

பின் வாங்குகிறாரா

பின் வாங்குகிறாரா

தேவையில்லாமல் இரண்டு பெரிய படங்கள் மோதினால் இண்டஸ்ட்ரிக்குத் தான் பாதிப்பு என கருத்துக்கள் கிளம்பி வரும் நிலையில், போட்டியில் இருந்து பின் வாங்க மாஸ் நடிகர் முடிவு கட்டி விட்டார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. பக்கத்து ஸ்டேட்டிலும் நடிகருக்கு வைத்த செக் தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறுகின்றனர்.

மாஸ் நடிகர் கோபம்

மாஸ் நடிகர் கோபம்

அண்ணா.. அண்ணான்னு சொல்லி கடைசியில நமக்கே ஆப்படிச்சிட்டாரே என அந்த பிரபல வாரிசு மீது மாஸ் நடிகருக்கே பயங்கர கோபம் ஏற்பட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதன் வெளிப்பாடே மாஸ் நடிகரின் ரசிக ஆர்மியினர் மூலம் சோஷியல் மீடியாவில் கோபமாக கொந்தளித்து வருகிறது என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X