»   »  ஹாங்காங் தொழிலதிபரை மணந்தாரா மீனா?

ஹாங்காங் தொழிலதிபரை மணந்தாரா மீனா?

Subscribe to Oneindia Tamil

ஹாங்காங்கில் செட்டிலாகியுள்ள இந்தியத் தொழிலதிபரை நடிகை மீனா மணந்துள்ளதாக புதிய செய்தி கோலிவுட்டைக் கலக்க ஆரம்பித்துள்ளது.

நடிகைகள் இரண்டு விஷயங்களை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஒன்று அவர்களின் வயது, இன்னொன்று அவர்களின் திருமணச் செய்தி.

மீனாவும் அதற்கு விதி விலக்கல்ல. எப்போதுமே தன்னை ஒரு டீன் ஏஜ் பெண்ணாகவே பாவித்துக் கொள்வார் மீனா. அவரது முகமும், அங்க அவயங்களும் அவரது வயதை குத்து மதிப்பாக கோடிட்டுக் காட்டினாலும், கூட தன்னை ஒரு பார்பி கேர்ள் பாப்பாவாகவே காட்டிக் கொள்வார். குரலையும் கூட குழந்தைத்தனமாகவே மாற்றிக் கொள்வார்.

அவரது கல்யாணம் குறித்து அவ்வப்போது கோலிவுட்டில் வதந்திகள் கிளம்புவதுண்டு. சமீபத்தில் கூட கன்னட நடிகர் சுதீஷை கல்யாணம் செய்து கொண்டு விட்டார் என ஒரு செய்தி பரவியது. இதை சுதீஷும், மீனாவும் மறுத்தனர்.

இந் நிலையில் புதிதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது. அதாவது ஹாங்காங்கில் செட்டிலாகி விட்ட இந்தியத் தொழிலதிபர் ஒருவருக்கும், மீனாவுக்கும் ரகசியக் கல்யாணம் ஆகி விட்டதாக அந்த செய்தி கூறுகிறது.

ஆனால் இதை மீனா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த வதந்திகள் எல்லாம் என்னை மிகவும் கஷ்டப்படுத்துகின்றன. பெரும் தொல்லையாக உள்ளது.

எனக்கும் திருமணம் நடப்பதாக இருந்தால் (அப்படீன்னா?) எல்லோரிடமும் சொல்லி விட்டுத்தான் செய்வேன். இரண்டாவது முறையாக என்னைப் பற்றி வதந்தி பரவியுள்ளது.

எனக்கு யாருடனும் பகை இல்லை, யாரையும் எதிரியாகவும் பார்க்கவில்லை. அப்படி இருக்கையில் ஏன்தான் இப்படி தவறான, அவதூறான, பொய்யான வதந்திகளை சிலர் பரப்புகிறார்களோ தெரியவில்லை என்று புலம்பினார் மீனா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil