»   »  காதலருடன் ஓடிப்போன மீரா?

காதலருடன் ஓடிப்போன மீரா?

Subscribe to Oneindia Tamil

நடிகை மீரா ஜாஸ்மீன் தனது காதலர் லோகித தாசுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றதாக நேற்று திடீர் புரளி பரவியது.ஆனால், இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அதே நேரத்தில் லோகிததாசுடனான மீராவின் உறவுகாரணமாக குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மீரா ஜாஸ்மீன் தற்கொலைக்கு முயன்றதாக நேற்று (வியாழக்கிழமை) புரளி கிளம்ப ஆரம்பித்தது. இதையடுத்துஎர்ணாகுளத்தில் உள்ள மீராவின் வீட்டை நிருபர்கள் தொடர்பு கொண்டபோது, அத் தகவலை மறுத்தார் மீராவின்தங்கையான சிபி.

இதற்கிடையே மீராவின் அக்காவான நிஷா நிருபர்களிடம் கூறுகையில்,

மீராவை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்ற வகையில் லோகித தாஸ் மீது எங்களுக்கு மிகுந்தமரியாதை உண்டு. ஆனால், அதை தாஸ் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு என் தங்கையின் வாழ்க்கையைகெடுத்து விட்டார்.

மீராவுக்கும் மலையாள நடிகர் பிரிதிவிராஜுக்கும் திருமணம் செய்து வைக்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.இருவருமே அதற்கு சம்மதித்து இருந்தார்கள். இருவரும் மோதிரம் கூட மாற்றிக் கொண்டார்கள்.

இந் நிலையில் சொந்தப் படம் எடுத்து மார்க்கெட் இழந்து, பணத்தையும் இழந்து நிற்கும் லோகிததாஸ், மீராவின்மனதை மாற்றி மீண்டும் தனது கட்டுப்பாட்டில் அவரை கொண்டு சென்றுவிட்டார். தமிழில் கஸ்தூரிமான் என்றபடத்தை எடுக்க லோகிததாஸ் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு அவரிடம் பணமில்லை. மீராவிடம் இருந்து பணம் பெறத் திட்டமிட்டார். அதை நாங்கள் தடுத்தோம்.இதையடுத்து மீராவையே எங்களிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்றுவிட்டார். தான் சம்பாதித்த பணம்,சொத்தை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி எங்களுக்கு எதிராக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் மீரா புகார்கொடுத்துள்ளார்.

இது கூட லோகிததாஸின் ஏற்பாடு தான். மீராவின் மனதை லோகிததாஸ் கெடுத்துவிட்டார் என்றார் நிஷா.

லோகிததாசுக்கு வயது 58 என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் 20 வயது மீராவுக்கும் இடையே காதல் இருந்துவந்தது. இதை மீராவின் வீட்டினர் எதிர்த்ததால் அவரிடம் இருந்து விலகினார் மீரா. இதையடுத்து மலையாளநடிகர் பிரிதிவிராஜுடன் மீராவுக்கு காதல் ஏற்பட்டது.

ஆனால், அந்தக் காதல் நெடு நாட்கள் நீடிக்கவில்லை. அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகிய மீராமீண்டும் லோகிததாசிடம் நெருங்கினார். இந் நிலையில் தான் வீட்டை விட்டு லோகிததாசுடன் வெளியேறியுள்ளார்மீரா.

இந்தத் தகவல் வேறுவித உருவமெடுத்து மீரா ஜாஸ்மீன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவிவிட்டது. முதலில்மீரா வீட்டை விட்டு வெளியேறியதை மறைக்க அவரது குடும்பத்தினர் முயன்றனர். பிரச்சனையே இல்லை என்றும்,கன்னட பட சூட்டிங்கிற்காக மீரா பெங்களூர் போயிருப்பதாகவும் கூறினர். ஆனால், பின்னர் உண்மை நிலவரத்தைவெளியிட்டுவிட்டனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil