மீண்டும் அந்த நடிகையை அசிங்கப்படுத்திய டீம்.. கடைசி நேரத்தில் வர மாட்டேன்னு மறுக்க அது தான் காரணமா?

By Staff

சென்னை: அந்த டிஜிட்டல் ரியாலிட்டி ஷோவையே அந்த நடிகை கலந்து கொள்கிறார் என்பதற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் பார்க்க ஆவலாய் இருந்தனர்.

இந்நிலையில், மீண்டும் அந்த நடிகையை ரியாலிட்டி ஷோ நிர்வாகம் அசிங்கப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே கடைசி நேரத்தில் தனது முடிவை நடிகை மாற்றிக் கொண்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சினிமாவில் தோல்வி

சினிமாவில் தோல்வி

சினிமாவில் ஒரு சில படங்கள் ஒர்க்கவுட் ஆன நிலையில், அடுத்தடுத்து அந்த ஒல்லி நடிகை நடித்த அனைத்து படங்களும் தோல்வியை தழுவின. இதனால், மார்க்கெட் இழந்து பெரிய பாதிப்பை சந்தித்தார். அப்போது தான் அந்த ரியாலிட்டி ஷோவில் நடிக்க அழைப்பு வந்ததும் உடனடியாக ஓகே சொல்லி விட்டார்.

பெரிய பெயர் கிடைத்தது

பெரிய பெயர் கிடைத்தது

நடிப்பில் பெரிதாக கவரவில்லை என்றாலும் தன்னுடைய இயல்பான குணத்தால் ரசிகர்களை மிகவும் கவர்ந்திழுத்த அந்த நடிகைக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயர் உருவானது. ஆனால், அதுவே அந்த நடிகைக்கு ஆபத்தாகவும் மாறி விட்டது. நிகழ்ச்சியில் இருந்து சூழ்ச்சி டிராமா மூலம் விரட்டி அடிக்கப்பட்டார்.

டிவி மீது கோபம்

டிவி மீது கோபம்

வெளியேற்றப்பட்ட நிலையில், அந்த டிவி மீதும் அந்த நிகழ்ச்சி நிர்வாகம் மீதும் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு விளாசி எடுத்து இருந்தார் அந்த நடிகை. அந்த நிகழ்ச்சியில் இருந்து வெற்றி பெறாமல் இது போல வெளியேறிய பலரும் நிகழ்ச்சியை குறை சொல்லி வருவது வாடிக்கையாக இருப்பதால் ரசிகர்களும் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை.

மீண்டும் அதே டிவியில்

மீண்டும் அதே டிவியில்

நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து அந்த நடிகை நடித்த சில படங்களும் படு தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் நடிகை ஆள் அட்ரஸே இல்லாமல் காணாமல் போய் விட்டார். ஏகப்பட்ட கடன் தொல்லைகளிலும் சிக்கியதால் மீண்டும் அதே டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

டிஜிட்டல் ஷோ

டிஜிட்டல் ஷோ

இந்நிலையில், டிஜிட்டல் ரியாலிட்டி ஷோவில் அனுதினமும் அந்த ஒல்லி நடிகையின் தரிசனம் கிடைக்கும் என அதன் அறிவிப்பு வந்ததில் இருந்தே ரசிகர்கள் துள்ளிக் குதித்து வந்தனர். ஆனால், சமீபத்தில் வந்த புரமோவில் அந்த நடிகையை ஹைலைட் பண்ணாமல் மற்ற போட்டியாளர்களை மட்டுமே ஹைலைட் செய்ததால், நிகழ்ச்சி நிர்வாகத்தின் மீது பயங்கர கடுப்பில் உள்ளாராம் அந்த நடிகை.

வர மாட்டேன்

வர மாட்டேன்

இந்நிலையில், நிகழ்ச்சிக்கு தன்னால் வர முடியாது என உடல் நிலையை காரணம் காட்டி நடிகை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி நிர்வாகம் நடிகையிடம் சமாதான பேச்சுவார்த்தைகளும் சம்பளம் குறித்த விளக்கங்களும் கொடுத்து வருகிறதாம். நடிகை என்ன இறுதி முடிவை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X