»   »  படம் ஹிட் அடித்தும் சம்பளம் தர மறுக்கும் தயாரிப்பாளர்!

படம் ஹிட் அடித்தும் சம்பளம் தர மறுக்கும் தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த வாரம் வெளியான 'சேம் ஐஸ்' படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் நன்றாக இருந்ததால் ஹிட் அடித்திருக்கிறது. சுமார் ஒன்றரை கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இதுவரையிலுமே ஆறு கோடி வரை வசூலித்திருக்கிறது. இத்தனைக்கும் பெரிய நடிகர்களோ, புரமோஷனோ இல்லை.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் செலவழிப்பதில் எப்படிப்பட்ட சிக்கனவாதி என்பது சினிமாத்துறைக்கே தெரியும். படம் ஹிட் அடித்தும் கூட இன்னும் யாருக்குமே சம்பளம் வழங்கவில்லையாம். ஹீரோவுக்கு அட்வான்ஸ் மட்டுமே தரப்பட்டது. ஹீரோயின்களுக்கு அதுவும் இல்லை. அப்ப இயக்குநருக்கு ஒளிப்பதிவாளருக்கெல்லாம்...?

அட போங்க பாஸ், அந்த தயாரிப்பாளர் எப்பவுமே இப்படித்தான்... என்று புலம்புகின்றனர் சினிமாக்காரர்கள்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Last week released thriller movie is a hit in box office and collection also good. But still the producer keep pending salary to all technicians.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil