வாங்குன அடியே போதும்.. தயங்கும் தயாரிப்பாளர்.. மான்ஸ்டருடன் மாஸ் ஹீரோ படம் மோதல் இல்லையாம்!
சென்னை: பிற மொழியில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களை கண்டு கோலிவுட் படங்கள் தொடர்ந்து அஞ்சி நடுங்கி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சமீபத்தில் அந்த இளம் ஹீரோவின் படம் கூட பிரம்மாண்ட இயக்குநரின் படத்துடன் மோதவில்லை என பல மாதங்கள் தள்ளி ரிலீஸ் ஆவப்போவதாக அறிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்த மிகப்பெரிய கிளாஷ் நடக்காது என திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன் காரணமாகத்தான் அந்த இயக்குநர் எந்தவொரு அப்டேட்டையும் கொடுக்காமல் அடக்கி வாசித்து வருகிறாராம்.

மான்ஸ்டர் படம் கன்ஃபார்ம்
கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகவேண்டிய அந்த பக்கத்து ஸ்டேட் மான்ஸ்டர் படம் ஏகப்பட்ட ரிலீஸ் தேதிகளை தள்ளி வைத்த நிலையில், இதற்கு மேல் பின் வாங்கினால், கடன் சுமை அதிகரித்து விடும் என இந்த தேதியை லாக் செய்துள்ளனர். இந்நிலையில், அந்த படத்துக்கு போட்டியாக மாஸ் ஹீரோவின் படமும் அதே தேதியில் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களை குஷிப்படுத்தியது.

பெங்களூரு விசிட்
ஆனால், சமீபத்தில் பெங்களூருக்கு மாஸ் நடிகர் விசிட் அடித்த நிலையில், மான்ஸ்டர் பட நடிகர் தரப்பில் இருந்து மாஸ் ஹீரோவுக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்பு தரப்பு தான் இதனை இறுதி செய்ய முடியும் என் கையில் ஒன்றும் இல்லை பாஸ் என அவரும் சொல்லி விட்டு வந்திருக்கிறாராம்.

வசூல் சொதப்பல்
அதே நேரம் மாஸ் நடிகரின் படத்தை தயாரித்து வரும் அந்த பெரிய நெட்வொர்க் ரிலீஸ் செய்த இரு முன்னணி நடிகர்கள் படமும் தொடர்ந்து பெரிய அளவிலான வசூல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் ஒரு பெரிய படத்துடன் போட்டியாக இறங்கினால், எதிர்பார்த்த வசூல் வேட்டையை நடத்த முடியாது என யோசித்து வந்த நிலையில், மாஸ் நடிகரும் இப்படியொரு கோரிக்கை வைக்கிறாங்க என தயாரிப்பு தரப்புக்கு தகவல் சொல்ல உடனடியாக சரி, சினிமா வாழ்வது தான் முக்கியம். நாம் கொஞ்சம் தள்ளி ரிலீஸ் பண்ணலாம் என்கிற முடிவை எடுத்திருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

கரெக்ஷன் இருக்கு
மேலும், அந்த படத்தின் கடைசி அவுட் புட்டை பார்த்த நடிகர் சில கரெக்ஷன்களை சொல்லி உள்ள நிலையில், அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லையாம். அதனால், தான் எந்தவொரு அப்டேட் மற்றும் படத்தை வெளியிட புரமோஷன் பணிகளையும் இன்னமும் ஆரம்பிக்காமல் தள்ளிப் போட்டு வருவதாக கூறுகின்ற்னார்.

கிளாஷ் வேண்டாம்
தொடர்ந்து பெரிய படங்கள் எல்லாமே, தங்களுக்குள் கிளாஷ் வேண்டாம் என்றும் தியேட்டருக்கு வந்து பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், இரண்டு வார இடைவெளியுடன் ஆவது படத்தை வெளியிடலாம் என்கிற முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்து வருகின்றனர். அதன் காரணமாக மாஸ் நடிகரின் படம் மான்ஸ்டர் படத்துடன் மோத போவதில்லை என்றும் கூடிய விரைவில் அடுத்த மாதத்தில் வருகிறதா? அல்லது அதற்கு அடுத்த மாதம் தள்ளிப் போகிறதா என்பது தெரியவரும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











