சத்தம் காட்டாமல் சைலன்ட் ஆன விரல் நடிகர்.. மீண்டும் மன அழுத்தத்தால் வாடி வருகிறாராம்!
சென்னை: தடை நீங்கியதும் சமூக வலைதளங்களில் தாறுமாறாக ஆக்டிவாக மாறிய விரல் நடிகர் மீண்டும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விடாது கருப்பாக தொடரும் பிரச்சனையை முடிக்க முடியாமல் நடிகர் தவித்து வருவதால் தான் படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகிக் கொண்டே போவதாக கூறுகின்றனர்.
பண்டிகை நாளுக்கே படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்னமும் படம் எப்போ வரும் என்றே சொல்லாமல் சைலன்ட் ஆகிவிட்டார் நடிகர்.

இதாவது வொர்க்கவுட் ஆகுமா
அந்த இயக்குநர் இயக்கத்தில் சமீப காலமாக வெளியான அத்தனை படங்களும் படு தோல்வியை சந்தித்து வந்த நிலையில், விரல் நடிகரின் படத்தை தான் அவரும் பெரிதாக நம்பி உள்ளார். தொடர் தோல்விகளில் இருந்து மீண்டெழ அந்த நடிகருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் மிகவும் முக்கியமாக உள்ளது. இருவருக்கும் இந்த முறை வெற்றி கிடைக்குமா என்கிற ஏக்கம் உள்ளது.

ரிலீஸ் பிரச்சனை
பண்டிகை தினத்துக்கு அந்த படம் வராமல் போக உச்ச நடிகரின் படக்குழுவினர் செய்த வேலை தான் காரணம் என விரல் நடிகரின் ரசிகர்கள் கம்பு சுத்திய நிலையில், உச்ச நட்சத்திரத்தின் படம் வெளியாகி பல நாட்கள் ஆகியும் விரல் நடிகர் படம் பற்றிய எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

சைலன்ட்டான நடிகர்
விடுதலை கிடைத்து விட்டது என நினைத்து மீண்டும் சோஷியல் மீடியாவில் சுதந்திர பறவையாக ஏகப்பட்ட போட்டோக்களையும் ட்வீட்களையும் போட்டு வந்த விரல் நடிகர் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக எந்தவொரு சத்தத்தையும் காட்டாமல் சைலன்ட் ஆகிவிட்டார். ஏதாவது ட்வீட் போட்டால் கூட ரசிகர்கள் ரிலீஸ் அப்டேட் கேட்டு மொய்த்து விடுவார்களோ என்கிற அச்சம் தான் காரணம் என்கின்றனர்.

மனசு கஷ்டம்
திருந்தி வந்த பிறகாவது திருப்பம் நடக்குமா? என எதிர்பார்த்து வந்த அந்த விரல் நடிகருக்கு மீண்டும் பல பிரச்சனைகள் ஒவ்வொன்றாக ஆரம்பமாகி பழையபடி மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூடிய சீக்கிரமே இந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகி படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

பொங்கலுக்காவது
லேட்டாக லேட்டாக அதே கான்செப்ட்டில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகும் சூழல் உருவாகி உள்ளது. வரும் பொங்கலுக்காவது படம் வெளியானால் தான் கொஞ்சமாச்சும் தேறும் என்றும் இல்லை என்றால் ரிலீஸ் ஆனாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா? என்கிற சூழல் நிலவி வருவதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











