இளம் ஹீரோவுடன் காதல் கன்ஃபார்ம் ஆகிடுச்சாம்.. சீக்கிரமே திருமணத்துக்கு ரெடியாகிறாரா அந்த நடிகை?
ஹைதராபாத்: ஐட்டம் சாங் நடிகைகளே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு படு கவர்ச்சியாக படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாகவே அந்த ஹீரோயின் மாறிவிட்டார்.
இளம் நடிகர் ஒருவருடன் சில படங்களில் இணைந்து மிகவும் நெருக்கமாக நடித்து வந்த அந்த நடிகை அவரையே காதலித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் விரைவில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.

தோல்வி பயம்
அந்த இளம் நடிகர் இந்த நடிகையுடன் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், மற்ற நடிகைகளுடன் இணைந்து நடித்து தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். அதிலிருந்து மீள்வதற்காகவே மீண்டும் நடிகையை சென்று சந்தித்த நடிகருக்கு ஆதரவும் அரவணைப்பும் அமோகமாகவே கிடைத்துள்ளது என்கின்றனர்.

மலர்ந்த காதல்
நடிகையிடம் நான் உன்னை காதலிக்கிறேன், நாம சேர்ந்து வாழ்வோமா என அந்த நடிகர் வெளிப்படையாக கேட்க, நடிகைக்கும் அவர் மீது ஆழ் மனதில் இருந்த காதல் வெளிப்பட உடனடியாக ஓகே சொல்லி உள்ளார். அதன் பின்னர் தான் இருவரும் ஒன்றாக சுற்றி வருகின்றனர்.

ரகசிய டூர்
காதல் மலர்ந்த நிலையில், இருவரும் அதை கொண்டாடத்தான் ரகசிய டூர் அடித்து வருகின்றனர் என்றும் பேச்சுக்கள் பரபரப்பாக எழுந்துள்ளன. வெளிப்படையாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பதை அறிவிக்கவும் தயாராகி விட்டதாக பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன.

திருமணத்துக்கு ரெடி
தொடர்ந்து பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வதும், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்வதையும் பார்த்த இந்த ஜோடியும் சீக்கிரமே நாமும் திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து நடிப்பையும் தொடர்வோம் என்கிற முடிவுக்கும் வந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பெற்றோர்கள் சம்மதம்
இரு வீட்டாரிடமும் நடிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து சம்மதத்தையும் பெற்று விட்டனராம். அடுத்த ஆண்டே பிரம்மாண்டமாக திருமணத்தை செய்து முடித்து விடவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் புகையத் தொடங்கி உள்ளன. நடிகையின் நடிப்பில் ரிலீஸ் ஆக வேண்டிய சில படங்கள் வெளியானதுமே முதலில் நிச்சயதார்த்த விழாவையும் பின்னர் திருமணத்தையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

மீண்டும் ஜோடி
அந்த நடிகருக்கு சமீப காலமாக படங்கள் ஓடுவதில்லை. அதே சமயம் நடிகை நடிக்கும் படங்கள் எல்லாம் வேறலெவலில் ஹிட் அடித்து வருகின்றன. இந்நிலையில், மீண்டும் நடிகையுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்து ஹிட் கொடுத்த பிறகு திருமண அறிவிப்பை வெளியிடவும் நடிகர் தீர்மானித்து உள்ளாராம். அதுவரை இப்படி ரகசியமாகவே தங்கள் உறவை மெயின்டெயின் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளார் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











