»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

ப்ரியாமணியில் காதலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவரைக் காதலிப்பது மலையாள இளம் ஹீரோவான பிருதிவிராஜ் என்கிறார்கள். இந்த பிருதிவிராஜுக்கும் மீரா ஜாஸ்மீனுக்கும்கல்யாணம் நடக்கப் போவதாக சில காலத்துக்கு முன் பரபரப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

மீராவின் விருப்பத்தை மீறி இந்தத் திருமணத்துக்கு அவரது வீட்டில் ஏற்பாடு செய்ததாகவும், கடைசி நேரத்தில் மீரா அந்தத்திருமணத்தை தவிர்த்துவிட்டதாகவும் செய்திகள் வந்தன.

இந் நிலையில் பிருதிவிராஜ்- ப்ரியா மணி காதல் பற்றி அரசல் புரசலாக செய்திகள் வருகின்றன.

பெங்களூரில் வளர்ந்தாலும் ப்ரியாமணி அடிப்படையில் மலையாளப் பெண். பாலக்காடு தான் சொந்த ஊர். இதனால் தமிழ்,மலையாளம் இரு மொழிகளும் அத்துப்படி. பெங்களூரில் வளர்ந்து மாடலானதால் கன்னடமும், இந்தியும், ஆங்கிலமும் வரும்.

பன்மொழிகள் தெரிந்த ப்ரியா பாரதிராஜாவின் கையால் குட்டுப்பட்டு, கண்களால் கைது செய் படத்தில் நடித்தார்.

படம் தோல்வியடைந்து ப்ரியாமணிக்கும் வாய்ப்புகள் அடைபட்டுவிட்டன. இதையடுத்து மலையாளத் திரையுலகம் (இவர்மலையாளி என்பதால்) ஓடி வந்து உதவியது.

அவார்ட் படம் ரேஞ்சுக்கு எடுக்கப்படும் ஒரு மலையாளப் படத்தில் பிச்சைக்காரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ப்ரியாமணி.அந்தப் படத்தின் பெயர் ஒற்ற நாணயம்.

முதலில் இந்த வேடத்தில் நடிக்க ரொம்பவே தயங்கினாராம், ஆனாலும் இதில் நடித்தால் நன்கு பேசப்படலாம் என்று நினைத்து,பிறகு ஓ.கே. சொன்னாராம்.

சமீபத்தில் ஒரு மலையாளப் பத்திரிகைக்கு ப்ரியா மணி கொடுத்த பேட்டியில், முத்தக் காட்சி மட்டுமல்ல, மிதமிஞ்சியகவர்ச்சியான வேடத்திலும் நடிக்க நான் தயங்க மாட்டேன் என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.

கவர்ச்சி என்பது என்ன? நமது உடல் அழகாக இருந்தால் அதை வெளிக் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை, எனவேகவர்ச்சியாக நடிப்பதால் என் மதிப்பு கெட்டு விடாது, மாறாக அழகுதான் வெளிப்படும்.

அதேபோல, முத்தக் காட்சியிலும் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை. கமல்ஹாசன் படங்கள் அனைத்திலும் முத்தக்காட்சிகள் கண்டிப்பாக இடம் பெறும். அதற்காக அவரது படங்களை யாரும் பார்க்காமல் இருந்ததில்லையே.

என்னைப் பொருத்தவரை கதைக்குத் தேவைப்பட்டால், எப்படிப்பட்ட ரோலிலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். நடிக்கவந்து விட்டால், எப்படியும் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும். அவர்தான் உண்மையான கலைஞருக்கு அடையாளம் என்றுபோட்டுத் தாக்கியுள்ளார் ப்ரியா.

தமிழில் இப்போது இவர் நம்பியிருக்கும் ஒரே படம் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படம் தான்.

Read more about: priyamani
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil