Don't Miss!
- Sports
ஐபிஎல்: படு உஷாரான ஹர்திக் பாண்ட்யா.. டாஸில் இவ்வளவு தெளிவு.. ராஜஸ்தான் போட்டியில் அதிரடி மாற்றம்!
- News
5 நாட்கள்.. நாய் உணவுதான் சாப்பாடு.. ருசியை சரியாகச் சொன்னால் ரூ. 5 லட்சம் பரிசு!
- Finance
சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு..!
- Automobiles
இரவு ரயில்களில் பெண்கள் டிக்கெட் இல்லாமல் செல்லமுடியுமா? அடிக்கடி பயணிப்பவர்களுக்கு கூடஇந்த ரூல்ஸ்கள் தெரியாது
- Lifestyle
இந்த சத்து நிறைந்த உணவுகள தினமும் சாப்பிட்டீங்கனா...உங்க நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்!
- Technology
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரியமான பொண்ணு போட்ட பிளான் எல்லாம் வீணாப் போச்சாம்.. அந்த இடத்துக்கே ரிட்டர்ன் ஆகிடுவாங்களோ?
சென்னை: இளம் நடிகையாக வலம் வரும் பிரியமான நடிகைக்கு ஆரம்பத்தில் செம லக் அடிக்க புதிய பட வாய்ப்புகள் குவிந்தன.
ஆனால், சமீப காலமாக கிளம்பியுள்ள ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோ நடிகைகளின் போட்டி வரவால் அம்மணிக்கு கிடைத்த கொஞ்ச நஞ்ச வாய்ப்புகளும் இப்போ கிடைப்பதில்லையாம்.
எங்கிருந்து புறப்பட்டாரோ மீண்டும் அந்த இடத்துக்கே ரிட்டர்ன் ஆகிவிடும் நிலை வந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
அட
நிஜமாதானா...ஏகே
62
படத்தில்
இந்த
ரோலில்
தான்
நடிக்கிறாரா
அஜித்
?

அப்படி நடிக்க தடை
பிரியமான நடிகையின் காதலர் ரொம்ப கிளாமராக நடிக்கக் கூடாது என போட்ட தடை தான் நடிகையை சினிமாவில் பெரிய அளவில் வளர விடாமல் குண்டு சட்டியிலேயே குதிரையை ஓட்டும் நிலையில் வைத்திருப்பதாக நடிகையே ரொம்ப ஃபீல் பண்ணி தனது தோழிகளிடம் பேசி உள்ளாராம். ஆரம்பத்தில் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வர குஷியில் இருந்த நடிகைக்கு தற்போது கஷ்ட காலம் ஆரம்பித்துள்ளது என்கின்றனர்.

ஏகப்பட்ட போட்டி
சினிமாவில் நடிகர்கள் 70 வயது வரை கூட ஸ்டார் அந்தஸ்த்துடன் இருக்க முடியும். ஆனால், நடிகைகள் 5 ஆண்டுகள் டாப்பில் இருப்பதே பெரிய விஷயம். ஒரு சில நடிகைகள் தான் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என முன்னணியில் இருப்பார்கள். தானும் அந்த இடத்திற்கு வந்து விட வேண்டும் என்கிற கனவுகளுடன் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த அந்த நடிகைக்கு தற்போது புதிதாக எந்தவொரு பட வாய்ப்புகளும் வருவதில்லையாம்

டஜன் கணக்கில் கண்டிஷன்
நடிகையை ஒரு சில தயாரிப்பாளர்கள் அணுகினாலும் படத்தில் இப்படி நடிக்க மாட்டேன், அப்படி நடிக்க மாட்டேன். இது போன்ற கதாபாத்திரங்கள் இருந்தால் கொடுங்கள் என டஜன் கணக்கில் நடிகை கண்டிஷன் போட்டு வந்ததும் தற்போது அவருக்கு எதிராக எதிர்வினை ஆற்றி வருகிறதாம். மேலும், இளம் நடிகைகள் இன்ஸ்டாகிராமில் காட்டுவதை விட அதிக கவர்ச்சியை திரையில் காட்ட தயாராகி இருப்பதும் இந்த நடிகைக்கு வரவிருந்த சில வாய்ப்புகளும் கையை விட்டு போய் விட்டதாம்.

ஒரே எக்ஸ்பிரசன்ஸ்
நடிப்பு ரீதியாகவும் சூப்பராக நடித்தாலும் நடிகைக்கு அது தொடர்பான வலிமையான கதாபாத்திரங்களுடன் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அணுகுவார்கள். ஆனால், எந்த படத்தில் பார்த்தாலும், சீரியலில் எப்படி நடித்தாரோ அதே எக்ஸ்பிரசன்ஸை கொடுத்து நடித்து வருவதால், இவரிடம் வெரைட்டியான நடிப்பும் இல்லை என பலரும் நடையை கட்டி விடுகின்றனராம்.

வந்த இடத்திற்கே ரிட்டர்ன்
சினிமா தனக்கு செட் ஆகாது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டு வருகிறாராம் அந்த நடிகை. மேலும், வீட்டில், திருமணம் செய்து கொள்ள கொடுக்கும் டார்ச்சர்களால் மீண்டும் பழையபடி சீரியலுக்கே ரிட்டர்ன் ஆகி விடலாமா? என்கிற முடிவுக்கே அந்த பிரியமான நடிகை வந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.